நித்தியத்திற்கான ஓட்டம் (ஏசாயா 40:31)

தேவனுக்கு மகிமை

நித்தியத்திற்கான ஓட்டம்

"
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்." ஏசாயா 40:31.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் தானாகவே செய்யக்கூடிய ஐந்து காரியங்கள் உள்ளது

1.படுத்தல்
2. உட்காருதல்
3. நிற்குதல்
4. நடக்குதல்
5.ஓடுதல்.

ஆவிக்குரிய பிரகாரமாக இவைகளை நாம் கவனிக்கும்போது இந்த ஐந்து அனுபவங்களிலும் ஜீவிக்கிறவர்களை நாம் காண முடியும். இவர்களில் முதலாவது படுத்துக்கொள்ளுதல் என்று சொல்லும் நிலைமையில் மரித்தவர்களையும் தூங்கிகிடக்கிறவர்களையும் தான் (எபேசியர் 5:14). ஒரு கூட்டத்தார் அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்கள் (எபேசியர் 2:1). மற்றொரு கூட்டத்தார் ஆவிக்குரிய ஜீவியத்தில் பின்மாற்றக்காரர்களாக பாவிகளோடு சேர்ந்து பாவிகளாக ஜீவிக்கிற ஆவிக்குரிய மரணமடைந்தவர்கள் (வெளிப்படுத்தல் 3:1). அதாவது மரித்தவர்கள் போலவே மாற்றப்பட்டு மரித்தோரிடத்தில் தூங்குகிறவர்கள் (எபேசியர் 5:14). பின்மாற்றமடைந்து சபிக்கப்பட்டவர்களாய் மாற்றப்பட்ட இவர்கள் மனந்திரும்பி புதுப்பிப்பது கூடாத காரியமானதினால் அவர்கள் நரகத்துக்கு பாத்திரவான்களாயிருக்கிறார்கள் (எபிரேயர் 6:4-8). எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாமல் புறம்பாக்கப்பட்ட கூட்டத்தார். இரண்டாவது உட்கார்ந்திருப்பவர்கள். ஆவிக்குரிய ஜீவியத்தில் இளைத்தும் விடாய்த்தும் உட்கார்ந்திருக்கிறவர்கள் (உபாகமம் 25:17). ஊருக்குப் போகும் வழியறியாமல் மூடர்களாக தங்களுடைய பிரயாணங்களில் இளைத்தும் விடாயத்தும்போனவர்கள். (பிரசங்கி 10:15). பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே என்றறியாமல் தங்களுடைய பிரயாசத்தினால் தேவனுடைய ராஜ்யத்தில் சென்றடைய முயற்சி செய்து இளைத்தும் விடாய்த்தும் உட்கார்ந்திருக்கிறவர்கள் (சகரியா 4:6). இக்கூட்டத்தார் கர்த்தருக்குள் பெலனடைந்து மென்மேலும் பலத்தைப் பெற்றுக் கொண்டால் சீயோனில் தேவசமூகத்தில் சென்றடையலாம் (சங்கீதம் 84:5-7). ஆனால் அவர்கள் தங்களுடைய இளைப்பு நிமித்தமாக விடாய்த்துப்போய் ஜீவியபிரயாணத்தில் பின்னாலே பலவீனர்களாக மாற்றப்பட்டால் எதிராளியாகிய பிசாசினால் வெட்டப்படுவார்கள் (உபாகமம் 25:17). இவர்கள் பெரிய மேன்மையுள்ளவர்கள் ஒன்றுமல்லர்.

மூன்றாவது நிற்கும் நிலவரம். சீமோனை போல ஞானஸ்நானம் பெற்று அப்போஸ்தலர்களோடும் தேவஜனங்களோடும் சேர்ந்து நிற்கிறவர்கள் (அப்போஸ்தலர் 8:13). இக்கூட்டத்தார் தேவ சபையோடும் ஊழியக்காரர்களோடும் சேர்ந்து நிற்கிறவர்களாகயிருந்தாலும் அவர்களுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையாயிராமல் கசப்பான பிச்சிலும் பாவ கட்டிலும் அகப்பட்டு துர்குணத்தால் நிறைந்து ஜீவிக்கிறார்கள் (அப்போஸ்தலர் 8:21-23). பக்தியும் கபடபக்தியும் கூட்டிச்சேர்த்தவர்களாக ஒரு பெயர்கிறிஸ்தவர்கள் என்ற நிலைமையில் உள்ள ஜீவியம். அவர்கள் தங்களுடைய துர்குணத்தை விட்டு மனந்திரும்பி தேவனை நோக்கி வேண்டிக்கொண்டால் அவர்களோடு மன்னிப்பார் (அப்போஸ்தலர் 8:22). அப்படியில்லாமற்போனால் கோதுமைகளோடுகூட களைகளாகவே இருந்து அறுவடைவரை வளர்ந்தாலும் அறுப்புக்காலத்தில் கட்டுகளாக கட்டி சுட்டெரிக்கப்படும் என்று சொல்லுகிறது, நரகத்துக்கு பாத்திரவான்களாகிறார்கள் (மத்தேயு 13:24-30). இக்கூட்டத்தாரும் அதிக மேன்மையுள்ளவர்கள் ஒன்றுமல்லர். நான்காவதாக நடக்கிறவர்கள். தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தேவனோடு கூட நடக்கிறவர்கள் (ஆதியாகமம் 5:22). இவர்கள் தேவனோடு சேர்ந்து வாழ்ந்து தேவனிடத்திலிருந்து நன்மைகளையும் ஆசீர்வாதங்களையுமெல்லாம் பெற்றுக்கொள்வதினால் தங்களுடைய ஜீவியத்தில் வளர்ச்சியுள்ளவர்கள் ஆகிறார்கள் (கொலோசெயர் 2:19). இவர்கள் மிகவும் மேன்மையுள்ளவர்கள் ஆவார்கள்.

இந்த நான்கு கூட்டத்தாரையும் குறித்து நாம் சிந்திக்கும் போது முதலாவது கூட்டத்தார் நரகத்திற்கு பாத்திரவான்களாக தள்ளப்பட்டு போனபடியால் அவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று கூட்டத்தாரையும் மேன்மையுள்ளவர்களாக கணக்கிடலாம். முதலாம் சங்கீதத்தில் அவர்களுக்குரிய ஞானபோதனைகளை நமக்கு காணலாம் (சங்கீதம் 1:1). மூன்றாவது கூட்டத்தார் மிகவும் மேன்மையானவர்களானபடியால் அவர்களோடு முதலாவது கூறுவது அவர்கள் துன்மார்க்கருடைய ஆலோசனையின்படி நடக்கக்கூடாது என்பதே. துன்மார்க்கமாய் நடப்பதற்கு வேண்டிய ஆலோசனைகள் அவர்களுடைய சங்காரத்துக்கு ஏதுவாகிறது (2 நாளாகமம் 22:3-4). ஆகவே தேவனுடைய ஆலோசனையின் படி நடந்து மகிமையில் பிரவேசிக்க வேண்டும் (சங்கீதம் 73:24). தேவனோடு கூட நடந்தால் எடுத்துக் கொள்ளப்பட முடியும் (ஆதியாகமம் 5:24). இரண்டாவதாக அடுத்த கூட்டத்தாரோடு சொல்வது பாவிகளுடைய வழியில் நிற்ககூடாது என்பதே. தேவனோடு கூட நிற்காதவர்களாயிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் நிர்மூலமானது போல நிர்மூலமாகாமலிருக்கும்படிக்கு காலேப்பு மற்றும் யோசுவாவை போல கர்த்தரோடு சேர்ந்து நிற்கிறவர்களாக உத்தமமாய் பின்பற்றுகிறவர்களாயிருக்க வேண்டும் (எண்ணாகமம் 32:11-13). மூன்றாவது கூட்டத்தாரோடு சொல்வது பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காரக்கூடாது என்பதே. பரிகாசக்காரர்களோடு கூட உட்கார்ந்தால் சுதந்திரம் கிடைக்காமல் புறம்பாக்கப்பட நேரிடும் என்பதால் அதை செய்யக்கூடாது (ஆதியாகமம் 21:9-10). கர்த்தர் தாமே நம்மோடு கூட எப்போதும் இருக்கும் படிக்கு நாம் தேவ சமூகத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும் (யாத்திராகமம் 18:19). இந்த ஞான உபதேசங்களை கைக்கொண்டு கீழ்ப்படிந்தால் தேவனுடைய சமூகத்தில் சென்றடையலாம்.

இங்கே முக்கியமாக நாம் கவனிக்கும் போது உட்காரக்கூடாது நிற்கக்கூடாது நடக்கக்கூடாது இப்படி சொல்லப்படும்போது பின்பு மீந்திருப்பது ஓடவேண்டுமென்பதே ஆகும். முன்பு நாம் சிந்தித்ததான ஐந்து காரியங்களிலும் ஐந்தாவது ஓட வேண்டும் என்பதுதான். கிறிஸ்துவ ஜீவியத்தில் மிக முக்கியமான ஒரு காரியம் ஓடுதல் என்பதே. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடி  கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி ஓட வேண்டும் என்பதே நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு காரியமாகும் (பிலிப்பியர் 3:14). ஆகவே நாம் இலக்கை அடையும்படிக்கு பந்தைய சாலையில் ஓடுகிறவர்களாக இருக்க வேண்டும் (1 கொரிந்தியர் 9:24). ஒரு ஓட்டப் பந்தயம் நடக்குமிடத்தை நாம் கவனித்தால் ஓட்டப்பந்தயத்தில் விருப்பமில்லாதவர்கள் அநேகர் அந்த இடத்துக்கே வராதவர்களாக இருப்பதை காணலாம். ஆனாலும் விருப்பமுள்ளதான அநேகம் பேர் பார்வையாளர்களாக அவ்விடத்தில் கூடி வந்திருப்பார்கள். பின்பு மற்றுள்ளவர்களை ஓடுவதற்கு உதவி செய்வதற்காக பயிற்சி அளிப்பவர்களும் அமைப்பாளர்களும் மைதானத்தில் இருப்பார்கள். ஆனால் மிகக் குறைந்த நபர்கள் மாத்திரமே ஓட விருப்பமுள்ளவர்களாக பந்தய சாலையில் காணப்படுவார்கள். சிந்திப்போம், பரிசு கிடைக்க வாய்ப்பு அதாவது இலக்கை அடைய வாய்ப்பு இந்த பந்தய சாலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு ஒருபோதும் பரிசும் கிரீடமும் கிடைப்பதில்லை. ஆகவே நாம் கண்டிப்பாக ஓட்டப் பந்தய பாதையில் காணப்படுகிறவர்களாக இருப்போமாக.

இப்போதும் நாம் பந்தய சாலையில் இருக்கிறோமா இல்லையா என்று எப்படி தெரியும் என்று கேட்டால் எபிரேய நிருபத்தில் சில காரியங்களை காணமுடியும். முதலாவது பாரமான யாவற்றையும் விட்டுவிட்டு ஓடுகிறவர்களாக வேண்டும் (எபிரேயர் 12:1). கவலையாகிய பாரம் (2 கொரிந்தியர் 11:28). அதாவது கவலைகளால் பாரமடைய கூடாது (லூக்கா 21:34). அநேக காரியங்களை குறித்து கவலைப்பட்டு கலங்கி இருக்கிறவர்களாக (லூக்கா 10:41). டென்ஷன் அதாவது கவலையுள்ளவர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களல்ல. நாம் ஒன்றையும் குறித்து கவலைப்படாமல் ஜெபத்தில் எல்லா காரியங்களையும் தேவனோடு அறிவிக்கிறவர்களாயிருக்க வேண்டும் (பிலிப்பியர் 4:6). கவலைகளையெல்லம்  கர்த்தர் மேல் வைத்து விட வேண்டும் (1 பேதுரு 5:6). கர்த்தர் நம்மை ஆதரிக்கும்படியாக நம்முடைய கவலைகளை எல்லாம் கர்த்தர் மேல் வைத்துவிட்டு நாம் ஓடுகிறவர்களாக மாற வேண்டும் (சங்கீதம் 55:22).

இரண்டாவதாக நம்மை நெருங்கி நிற்கிற பாவங்களை விட்டுவிட்டு ஓட வேண்டும் (எபிரேயர் 12:1). கிறிஸ்தவ ஜீவியம் என்பது பாவமில்லாமல் ஜீவிப்பதற்கானதாகும். நாம் ஞானஸ்நானம் பெறும்போது நம்முடைய சகல பாவங்களும் மன்னிக்கப்பட்டு கழுவப்பட்டவர்களாக பாவத்திலிருந்து விடுதலையை பெறுகிறோம் (அப்போஸ்தலர் 2:38). தொடர்ந்து நம்மில் ஏதாவது பாவம் வந்தால் நாம் அதை தேவனோடு அறிக்கை செய்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு சுத்திகரிப்பை பெறுகிறோம் (1 யோவான்1:7-9). ஆனாலும் பாவம் இல்லாமல் ஜீவிக்க முடியாதபடிக்கு சில நெருங்கி நிற்கிற பாவங்கள் பலருடைய வாழ்க்கையிலும் இருக்கிறது. இவையை துணிகரமான பாவங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது (சங்கீதம் 19:13). அது நம்மிடம் நெருங்கி நிற்பதினால் விட்டு விட முடியாமல் துணிகரமாக செய்கிற பாவங்களாகும். நாம் தேவனோடு ஜெபித்து தேவன் அவைகளை நம்மிலிருந்து அகற்றி நம்மை காத்துக்கொள்வதினால் நாம் பாவம் இல்லாதவர்களாக பந்தய சாலையில் ஓடுகிறவர்களாகிறோம். பாவ சுபாவங்களுக்கு அடிமைப்பட்டவர்களாக பாவத்தில் வாழ்கிறவர்கள் பந்தைய சாலையில் ஓடுகிறவர்கள் அல்ல. மூன்றாவதாக பொறுமையோடு ஓட வேண்டும் (எபிரேயர் 12:1). சூழ்நிலைகள் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி சாய்ந்தும் சரிந்தும் அல்ல, விடாய்த்தும் இளைத்தும் அல்ல, உற்சாகத்தோடுகூட ஓடுகிறவர்களாக வேண்டும். மற்றவர்களுடைய நிர்பந்தத்தினாலும் உற்சாகப்படுத்துவதினாலும் அல்ல உறுதியான உற்சாகத்தோடு ஓடவேண்டும். இருமனதுள்ள மனிதன் தன் வழிகளில் எல்லாம் பந்தய சாலையிலும் நிலையற்றவனாயிருப்பான் (யாக்கோபு 1:8). அவர்களும் பந்தைய சாலையில் ஓடுகிறவர்களாக இருக்க முடியாது.

மறுபடியும் சில காரியங்களை கவனித்தால் பின்னானவைகளை மறந்து நாம் நம்முடைய ஓட்டம் ஓடவேண்டும் (பிலிப்பியர் 3:14). ஜீவன் தப்புவதற்காக ஓடுவதினால் வழியில் நிற்கிறவர்களும் பின்னால் திரும்பி பார்க்கிறவர்களாயுமிருக்கக் கூடாது (ஆதியாகமம் 19:17). விட்டுவந்தவைகளையும் உண்டாயிருந்தவர்களையும் நினைத்தால் திரும்பிப் போக நேரிடும் (எபிரேயர் 11:15). மாத்திரமல்ல கர்த்தர் தாமே நம்முடைய பலவீனங்களில் உதவி செய்கிறவராக இருக்கிறபடியால் நாம் நம்முடைய பலவீனங்களையோ விழுகைகளையோ குறைவுகளையோ அறிவில்லாமைகளையோ ஒன்றையும் நினைக்காமல் ஓடுகிறவர்களாக வேண்டும் (எபிரேயர் 4:15). அதற்காக கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட்டு ஓடவேண்டும் (எபேசியர் 6:10). இப்போதும் முன்பிலுள்ளதை நாடிக்கொண்டு பரம அழைப்பின் பந்தய பொருளுக்காக ஓட வேண்டும் (பிலிப்பியர் 3:14). பந்தய சாலையில் ஓடுகிறவர்களில் ஒருவருக்கு மட்டுமே பரிசு இந்த சிந்தனையினால் நிறைந்து நாம் பெற்றுக் கொள்ளும்படியாக ஓட வேண்டும் (1 கொரிந்தியர் 9:24). ஒருவரும் நம்மை கொள்ளைகொண்டு போகாதவர்களாயிருக்க வேண்டும். (கொலோசெயர் 2:18). இப்படிப்பட்ட காரியங்களில் கவனமாக இருந்து ஜீவிக்கிறவர்களே பந்தய சாலையில் ஓடுகிறவர்களாக கிரீடத்தை விரும்புகிறவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தேவனுடைய வசனம் ஒரு பாக்கியம் நிறைந்த நம்பிக்கையை தருவது கர்த்தருடைய பிரசன்னமாகுதலில் கிரீடத்தை பெற விரும்புகிற யாவருக்கும் அந்தக் கீரிடம் கிடைக்கும் என்பதே (2 திமோத்தேயு 4:8) இது எப்படி என்று கீழே நமக்கு சிந்திக்கலாம்.

ஆரம்பத்தில் நாம் பார்த்த முதல் மூன்று காரியங்களான மனிதர்களால் எளிதில் செய்யக்கூடிய படுத்துக்கொள்ளுதல் உட்காருதல் நிற்த்தல் ஆகிய இவைகள் பெரிய மேன்மை இல்லாததும் கவனமில்லாமல் இருந்தால் அழிவுக்கேதுவான அனுபவங்கள் ஆனபடியால் பிரயோஜனம் இல்லாததும் மிக சாதாரணமானவைகளும் ஆனபடியால் இவைகளை மாற்றி மற்ற இரண்டு காரியங்களான நடத்தல் ஓடுதல் என்ற விசேஷமானவைகளை மட்டும் ஏசாயா நாற்பதாம்  அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. கர்த்தருக்கு, கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்கிறவர்கள் பலனை புதுப்பித்துக் கொள்வார்கள் என்று சொல்லப்பட்டது மாத்திரமல்ல அவர்கள்  இளைப்படையாமல் ஓடுகிறவர்களாகவும் சோர்ந்து போகாமல் நடக்கிறவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல சாதாரண மனிதனின் சரீரத்தில் செய்ய முடியாதவை ஆகிய வேறொரு காரியமும் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் கழுகுகளைப் போல செட்டைகளை அடித்து எழும்புவார்கள் அதாவது  பறப்பார்கள் என்பதே (ஏசாயா 40:31). மண்பாண்டங்களாகிய நம்மில்  தம்முடைய மகத்துவமுள்ள வல்லமையை பொக்கிஷமாக தந்திருக்கிறார் (2 கொரிந்தியர் 4:7). கர்த்தருக்காக காத்திருந்து ஒவ்வொரு நாளும் இந்த மகத்துவமுள்ள வல்லமையை புதுப்பித்துக்கொள்ளும்போது  இளைப்படையாமல் ஓடியும் சோர்ந்து போகாமல் நடந்தும் இறுதியாக கர்த்தரிலும் அவருடைய பலத்த சத்துவத்தின் வல்லமையிலும் பலப்பட்டு பறக்கிறவர்களாக முடியும் (எபேசியர் 6:10). மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிப்பது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும் என்று சொன்ன பின்பு பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றும் சொல்லப்படும் போது இயேசு பிரசன்னமாகும் நாளில் இயேசுவை எதிரேற்று இலக்கை பெறும்படிக்கு கர்த்தருடைய வல்லமையால் ஓடுகிறவர்கள் விமானம் தன் பாதையில் ஓடி பறப்பதை போல கழுகுகளை போல செட்டைகளை அடித்து பறந்து கர்த்தரிடத்தில் செல்லுவார்கள் என்பது ஆகும் (மத்தேயு 24:27-28). அவர்கள் பலத்தின்மேல்பலன் அடைந்து அதாவது பெலனை புதுப்பித்துக் கொண்டு தேவனுடைய வல்லமையினால் பறந்து தேவ சந்நிதானத்தில்  காணப்படுவார்கள் (சங்கீதம் 84:7). இது ஒருபோதும் மனிதர்களால் கூடாதது தான் ஆனால் தேவனால் மட்டுமே கூடும் (மாற்கு10:27)

முதலாம் சங்கீதத்தில் மனிதத் தன்மைகளுக்கு எதிர்மறையானதாகவே ஒவ்வொரு காரியமும் சொல்லப்பட்டிருக்கிறது. உட்கார்ந்தும் நின்றும் நடப்பதுமே மனிதத்தன்மையாகும். ஆனால் கர்த்தருடைய பார்வையில் ஆரம்பத்தில் நாம் கவனித்த தேவனோடு கூட நடத்தல் என்ற முக்கியமானவைதான் முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து நிற்த்தல் உட்காருதல் இப்படிப்பட்ட காரியங்களாக கீழே சொல்லப்பட்டுள்ளது. ஏசாயா நாற்பதாம்  அதிகாரத்திலும் மனிததன்மையான நடத்தல் ஓடுதல் பறத்தல் என்றல்ல  தெய்வீகமாக முக்கியமானவை பறப்பதாகையால் அது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. பின்பு ஓடுதல் நடத்தல் என்பவைகளை காணலாம். இந்த இரண்டு அனுபவங்களின் வழியாகவும் மனிதத்தன்மையால் நாம் வாழ்ந்து நடக்கிறவர்களாயிருந்து சோர்ந்து போய் நின்று இளைப்படைந்தவர்களாக உட்கார்ந்தும் பறக்கிறவர்களாயிருந்து சோர்ந்துபோனவர்களாக ஓடுகிறவர்களாகயிருந்து இளைப்படைந்தவர்களாக நடக்கிறவர்களும் ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக நம்முடைய இந்த ஜீவியம் பின்மாற்றம் அடைந்து தோல்வியில் முடிவடையும். ஆவியினாலே ஆரம்பித்து மாம்சத்திலே மனிதத்தன்மையில் முடிவை பெறக்கூடாது (கலாத்தியர் 3:3). ஆகவே  மனிதத்தன்மையில் ஆரம்பித்து ஆவியினாலே நடத்தப்படுகிறவர்களாவோமாக. ஏனென்றால் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல ஜென்ம சரீரமே முந்தினது, ஆவிக்குரிய சரீரம் பிந்தினது (1 கொரிந்தியர் 15:46). ஆகவே அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நாம் கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பிக்கப்பட்டு இரட்சிக்கப்படுகிறோம் (எபேசியர் 2:1,5). அதனால் நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்து உன்னதங்களில் உட்கார செய்திருக்கிறது (எபேசியர் 2:7). இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றதினால் நாம் சபையோடும் நடத்திப்புக்காரரோடும் சேர்ந்து நிற்க முடிகிறது (அப்போஸ்தலர் 2:37, 8:13). தொடர்ந்து நாம் இந்த உலக வாழ்க்கையின் முடிவுபரியந்தம் தேவனோடு கூட நடந்து ஜீவிக்கிறோம் (ஆதியாகமம் 5:22). இதனால் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் நம்முடைய ஓட்டத்தை நாம் பொறுமையோடு ஓடுகிறோம் (எபிரேயர் 12:1). இனி நம்முடைய கர்த்தர் பிரசன்னமாகும்போது நாம் அவரோடு கூட சேர பறந்து போக முடியும் (மத்தேயு 24:27-28). ஆகவே நாம் இன்று ஓடுகிறவர்களாகவே காணப்பட்டு கர்த்தருடைய பிரசன்னமாகுதலில் பறக்கிறவர்களாகும்படிக்கு தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஸ்தோத்திரம்.