பின்பற்ற வேண்டியவரின் அடிச்சுவடுகள் (1 பேதுரு 2:21)
தேவனுக்கு மகிமை
பின்பற்ற வேண்டியவரின் அடிச்சுவடுகள்
" இதற்காக நீங்கள் அழைக்கப்படுமிருக்கிறீர்கள்; ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு ஒரு மாதிரியைப் பின் வைத்துப்போனார்." 1 பேதுரு 2:21
நமது கிறிஸ்தவ வாழ்க்கையில், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுகிறிஸ்துவும் இந்த உலக வாழ்க்கையில் தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட விபரீதங்களை சகித்து கொண்டு அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து கஷ்டம் அனுபவித்தும் நமக்கு ஒரு முன்மாதிரியான வாழ்க்கையைக் காட்டினார் (எபிரெயர் 12:2-3). ஆகையால், உலகம் அல்லது உலக மக்கள் நமக்கு எதிராக என்ன கஷ்டங்களைக் கொண்டு வந்தாலும்,அவரைப் பின்பற்ற இயேசு கிறிஸ்து நம்மை அழைத்திருப்பதால், நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உறுதியாக முன்னேறிப் போகலாம். நாம் விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி புத்திச்சொல்லி, அநேக உபவத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று நமது மனதை உறுதியாக்கி கொண்டு முன்னேறலாம் (அப்போஸ்தலர் 14:22). இங்கே நாம் கவனிக்கவேண்டியது கிறிஸ்துவின் மாதிரியைகள் என்று அல்ல, மாதிரியை என்று ஒருமைப்பாட்டில் தெளிவாக கூறியிருக்கிறது. நாம் பின்பற்றுவதற்கு ஒரே ஒரு மாதிரி, ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. அந்த மாதிரியைப் பின்பற்றி, இயேசுவாகிய அந்த வழியில் போனால் நமக்கு பிதாவின் சந்நிதியில் சீயோனில் காணப்படலாம் (யோவான் 14:6). இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் தன்னிடம் வந்த அனைவரையும் தன்னைப் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். என் பின்னே வாருங்கள் என்ற அழைப்பைக் கேட்டு சீஷர்கள் அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:19, 21-22, 9:9). ஐசுவரியவானாகிய வாலிபனையும் இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைகிறார் (மத்தேயு 19:21). திரளான ஜனங்களும் இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்கு ஊழியஞ் செய்த அநேக ஸ்திரீகளும் அவரைப் பின்பற்றுக்கிறவர்களாக இயேசுவோடுகூட இருந்தார்கள் (மத்தேயு 20:29, 27:55). எனவே, நாமும் அந்த மாதிரியை உண்மையுடன் பின்பற்றி இயேசுவைப் பின்தொடரலாம்.
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்ற விஷயத்தை நாம் கவனிக்கும்போது, நல்ல மேய்ப்பரான இயேசுவுடைய அனைத்து ஆடுகளும் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு இயேசுவைப் பின்பற்றுகின்றன (யோவான் 10:3-4). இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் இயேசுவின் சத்தத்தைக் கேட்டு இயேசுவினால் வழிநடத்தப்படுகின்றன (யோவான் 10:16). எனவே, இயேசுவைப் பின்பற்ற விரும்பும் எந்தவொரு நபருக்கும் இயேசு வைத்த மாதிரியான அடிச்சுவடு அவரது சத்தத்தைக் கேட்பதாகும். எனவே, இயேசுவைப் பின்பற்றுவதின் அடையாளம், இயேசுவின் சத்தத்தைக் கேட்டு அந்த வார்த்தையின்படி வாழ்வதேயாகும் (மத்தேயு 7:21-27), மேலும் உண்மை என்னவென்றால், இயேசு கட்டளையிடாத வேறு எந்த செயல்களும் நம்மை தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவர்களாக மாற்றாது. இயேசு தாமாக எதையும் செய்யாமல், பிதா அவருக்குக் கட்டளையிட்டபடியும் (யோவான் 8:28) பிதா செய்து காண்பித்தபடியும் இயேசு செய்தார் (யோவான் 5:19).
ஆகையால், நாம் என்ன உபத்திரங்களை சகிக்க வேண்டியிருந்தாலும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை ஏற்றுக் கொண்டதினால் கர்த்தரைப் பின்பற்றுபவர்களாகிறோம் (1 தெசலோனிக்கேயர் 1.6). ஆகையால், இயேசுவைப் போலவே, பாடுகளினாலே நாமும் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு பூரணராவோம் (எபிரெயர் 5:8). அவருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வழிகளை பின்பற்றுவதற்க்காக வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, தன் கதவு நிலையருகே காத்திருந்து, தனக்கு செவிக்கொடுத்துக் கீழ்ப்படிகிறவன் பாக்கியவான் (நீதிமொழிகள் 8:32-34). நாம் அதைப் பற்றி வேறொரு கோணத்தில் சிந்தித்தால், நாம் தினமும் காலையில் தேவ சந்நிதியில் இருந்து, கர்த்தரை நம் தேவன் என்று அறிக்கை செய்து கொண்டு, உமக்கு பிரியமானதைச் செய்ய போதித்தருளும் என்று ஜெபித்து தேவ சித்தத்திற்காக நம்மை ஒப்படைக்க வேண்டும். நம்மை எல்லா சத்தியத்திலும் வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவர், நம்மை செம்மையான வழியில் நடத்துவார் (சங்கீதம் 143:10).
இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள், தாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றியதாகக் கூறுகிறார்கள் (மாற்கு 10:28). தன்னிடம் உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் யாரும் அவருடைய சீஷர்களாக முடியாது என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார் (லூக்கா 14:33). எனவே, இயேசுவைப் பின்பற்ற விரும்பும் ஒருவர், இயேசுவினிமித்தமோ அல்லது சுவிசேஷத்தினிமித்தமாகவோ தன்னிடம் உள்ள அனைத்தையும் வெறுத்துவிட ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இம்மையிலே துன்பங்களோடேகூட நூறத்தனையாக பெறுவார்கள் என்றும், மறுமையிலே அவர்கள் நித்திய ஜீவனையும் அடைவார்கள் என்றும் இயேசு உண்மையாகவே கூறுகிறார் (மாற்கு 10:29-30). எனவே, வெறுத்துவிடுதலினால் வரும் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்களாவோம்.
மேலும் ஒருவன் இயேசுவை பின்பற்ற விரும்பினால் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு இயேசுவை பின்பற்றக் கடவன் என்று இயேசு கூறினார் (மத்தேயு 16:24). தனது சொந்த ஜீவனை வெறுக்கா விட்டால் இயேசுவின் சீஷர்ராக இருக்க மாட்டான் என்பதே (லூக்கா 14:26). அப்போஸ்தலனாகிய பவுலும் தன் பிராணனையும் அருமையாக எண்ணேன் என்று கூறினார் (அப்போஸ்தலர் 20:24). ஆகையால் நாம் கர்த்தருடன் காவலிலும் சாவிலும் இயேசுவை பின்பற்ற ஆயத்தமுள்ளவர்களாவோம் (லூக்கா 22:33). அதுமட்டுமல்ல நாம் நம்முடைய சிலுவையை சுமந்துக் கொண்டு இயேசுவை பின்பற்ற வேண்டும். சிலுவையில் குற்றநிவாரண பலியான இயேசுவின் வாழ்க்கையில் இயேசுவை நொறுக்க தேவனுக்கு சித்தமானப்படியால் தேவன் அவரை பாடுகளுக்கு உட்ப்படுத்தியது இயேசுவின் சிலுவை என்பதே (ஏசாயா 53:10). ஆகையால், நம் வாழ்க்கையிலும் சொந்த சித்தம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி தேவனின் சித்தத்திற்காக நம்மை ஒப்புக்கொடுத்து தேவன் நமக்கு தருகிற துன்பமாகிய நமது சொந்தம் சிலுவையை எடுத்துக்கொள்வோம் (லூக்கா 22:42). நாம் சுயத்திற்கு மரித்து, நம்மை நாமே வெறுத்து, இயேசுவோடுகூட, இயேசுவேபோல சிலுவையில் அறையப்பட்டு, இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார் என்ற மனப்பான்மையுடன் கர்த்தரைப் பின்பற்றுவோமாக (கலாத்தியர் 2:20).
இயேசு உலகத்தின் ஒளியாய் இருப்பதால் இயேசுவை பின்பற்றுபவரும் இருளில் நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்று வாசிக்கிறோம் (யோவான் 8:12). முற்காலத்தில் நாம் இருளாய் இருந்தோம் ஆனால் இப்போது கர்த்தருக்குள் ஒளியாக இருக்கிறோம். ஆகையால், கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று சோதித்துப் பார்த்து வெளிச்சத்தில் உள்ளவர்களாக நாம் நடக்க வேண்டும். ஒளியின் கனி, சகல நற்குணமும், நீதியும், சத்தியமுமாகும். ஆகையால், கனியற்ற அந்தக்காரக் கிரியைகளுக்கு உடன்படாமல் இருப்போமாக (எபேசியர் 5:8-11 மலையாளம் வேதாகமம்). இயேசு தேவனின் கட்டளைபடி பல நல்ல கிரியைகளை நமக்கு காண்பித்தது போல (யோவான் 10:32) நாமும் தேவனின் வசனத்தின்படி நல்ல கிரியைகளைச் செய்வோம். இவ்விதமாக மனுஷர் நமது நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, அவர்களுக்கு முன்பாக பிரகாசிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றலாம் (மத்தேயு 5:16).
இயேசு எங்கே இருக்கிறாரோ அங்கே தன் ஊழியக்காரனும் இருப்பான் ஆதலால் இயேசுவின் ஊழியம் செய்பவர்களாகவே அவரை பின்பற்ற வேண்டும் (யோவான் 12:26). இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில் இயேசுவுக்கு ஊழியஞ் செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரை பின்பற்றி வந்த அநேக ஸ்திரீகள் முடிவுவரையும் அவரை பின்பற்றினார்கள் (மத்தேயு 27:55). இந்த ஸ்திரீகளில் பலரும் தங்கள் ஆஸ்திகளால் இயேசுவுக்கும் அவரை பின்பற்றி வந்தவர்களுக்கும் ஊழியம் செய்து வந்தார்கள் என்று நாம் காணலாம் (லூக்கா 8:1-3). சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே இயேசு கூறுகிறார் (மத்தேயு 10:42). இயேசு தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து தமது வலது பக்கத்தில் உள்ள ஆசிர்வதிக்கப்பட்டவர்களை பார்த்து, இயேசுவின் இந்த சிறிய சகோதரர்களில் ஒருவனுக்கு தாங்கள் செய்தவைகள் எல்லாம் இயேசுவுக்கு செய்தார்கள் என்று கூறினார் (மத்தேயு 25:34-40). ஆனால் இந்த சிறியவரில் ஒருவனுக்கு உண்ணுவதற்கும் குடிப்பதற்கும் உடுகத்துவதற்கும் கொடுக்காமலும் அந்நியனாயிருந்த்தும் சேர்த்துக்கொள்ளாமலும் வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாய் இருந்த போதும் விசாரிக்கவராதவர்களாயும் வெளிப்பட்ட இடது பக்கத்திலுள்ளவர்கள் இயேசுவுக்கு எப்பொழுது உதவி (ஊழியம். ஆங்கில வேதாகமம்) செய்யாதிருந்தோம் என்றார்கள் (மத்தேயு 25:44) ஆகையால், நமது உடைமைகளை கொண்டு, அநீதியுள்ள உலகப்பொருளால் சிநேகிதரை சம்பாதிக்கும் படிக்கு இயேசுவின் இந்த மிகவும் சிறிய சகோதரர்களுக்கு ஊழியம் செய்ய நாம் மனமுள்ளவர்களாக மாறினால் நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளப்படுவோம் (லூக்கா 16:9). இயேசு இருக்கும் இடத்தில் நாமும் இருப்பதற்காக இயேசு மீண்டும் வந்து நம்மைத் தம்மிடம் சேர்த்துக் கொள்வார் (யோவான் 14:3).
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து, தான் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிப்போவார் என்று கூறினார் (யோவான் 6:62). இயேசுவினுடையவரும் நம்முடையவருமான பிதாவும் தேவணுமாயவரிடத்திற்கு இயேசு ஏறிப்போகிறேன் என்றார் (யோவான் 20:17). அந்த இடத்திற்கு இப்போது நமக்கு இயேசுவைப் பின்பற்றிபோக முடியாது. ஆனால் பின்னர், இயேசுவைப்போலவே நாம் உயிர்த்தெழுந்தால் நாமும் இயேசுவைப் பின்பற்ற முடியும் (யோவான் 13:36). சீயோனிலே தேவசந்நிதியில் காணப்பட்டு ஆட்டுக்குட்டியாகிய நமது கர்த்தர் போகுமிடமெல்லாம் நாம் அவரை பின்பற்றலாம் (வெளிப்படுத்துதல் 14:4).
இந்த அனுபவங்களுடன் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்ற முடியும் ? சாலொமோனின் உன்னதப்பாட்டில் சூலமித்தி தன் நேசரிடம், “என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்” என்றாள் (உன்னதப்பாட்டு 1:4). இயேசுவைப் பின்பற்ற விரும்பும் ஒருவர் அதற்காக இயேசுவின் உதவியை நாடி, இயேசுவின் பின்னாலே இழுத்துக்கொள்ள விரும்பும்போது, கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது என்றுக் காண்கிறோம். அது இயேசுவின் பின்னாலே சென்று, நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவுக்காக வாழ்வதற்குரிய அன்பின் நெருக்கமாகும் (2 கொரிந்தியர் 5:14-15). நாம் கிரையத்துக்குக் கொள்ளப்பட்டதால் நாம் நம்முடையவர்களல்ல என்றும் அறிகிறோம் (1 கொரிந்தியர் 6:19). ஆகையால், இயேசுவைப் பின்பற்றி அவருடைய சத்தம் கேட்டு இயேசுவின் அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிபவர்களாக, இயேசுவின்னுடையவர்களாக மாறுவோம். தேவன் நமது இருதயங்களை விசாலமாக்கி தரும்போது, அவருடைய கற்பனைகளின் வழியாக உறுதியாக ஓடி (சங்கீதம் 119:32). இயேசுவைப் பின்பற்றுபவறாக பரலோக சீயோனில் சேருவதற்கு தேவன் நம் அனைவருக்கும் உதவுவாராக.