பலப்படுத்துபவரின் தெய்வீக வல்லமை (பிலிப்பியர் 4:13)
தேவனுக்கு மகிமை
பலப்படுத்துபவரின் தெய்வீக வல்லமை
"என்னைப் பலப்படுத்துகிற றிஸ்துவினாலே எல்லாவற்றையும்ஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு." பிலிப்பியர் 4:13
ஒரு நபர் உண்மையிலேயே கிறிஸ்தவ வாழ்க்கையைத் தொடங்கும்போது, அவர் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறும்போது, தேவன் அவருக்கு பரிசுத்த ஆவியின் வரத்தைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவி நம்மீது வரும்போது, நாம் வல்லமை பெற்று பெலமடைகிறோம். தேவன் இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின போது காண்டாமிருகத்துக்கொத்த பெலன் இருந்தது போல, நம்மை பரிசுத்த ஆவியினால் பலப்படுத்துகிறார். எனவே, நம் ஆவிக்குரிய பயணத்தில் நாம் பலவீனமாகிவிடக் கூடாது. இஸ்ரவேலர்கள் தங்களுடைய வனாந்தர பயணத்தில் வழியில் இனைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற பலவீனரை எதிரி வெட்டினான் என்பதை நாம் பார்க்கலாம். நாமும் பலவீனமாகிவிட்டால், நம்முடைய எதிராளியாகிய பிசாசு நம்மை விழுங்கிவிடுவான். அவர்கள் எகிப்தை விட்டு புறப்பட்டபோது, அவர்களின் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்தது இல்லை. ஆனால் அவர்கள் பயணத்தில் பலவீனப்பட்டத்தினால் அழிந்து போனதைப் போல நாம் அழிந்து போகக்கூடாது. ஆகவே நாம் கர்த்தருக்காகக் காத்திருந்து, புதுப்பெலன் அடைந்து வாழுகிறவர்களாக வேண்டும். தேவனில் பெலன் கொள்ளுகிறவர்களாக பலத்தின்மேல் பலம் அடைந்து, சியோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்பட வேண்டும். ஆகையால், நம்மைப் பலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்வோம்.
இந்த வசனத்தைப் படிக்கும் போது என்னைப் பலப்படுத்தும் கிறிஸ்துவின் மூலம் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று காண்கிறோம். தேவன் மனிதனைப் படைத்து ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் காக்கவும் அவனை அங்கே வைத்தார். தோட்டத்தில் தேவன் மனுஷனிடம் செய்யச் சொன்ன வேலையைச் செய்ய வேண்டியதாயிருந்தது. ஆனால், தேவன் அங்கே உண்டாக்கிய நல்ல மரங்களின் பழங்களை அவனுடைய உணவுக்காக அவன் சாப்பிடலாம். எனவே அவன் தன் அன்றாட வாழ்விற்க்காக வேலை செய்யவில்லை, ஆனால் தோட்டத்தில் தேவன் செய்யச் சொன்ன வேலையைச் செய்து வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் பாவத்தின் காரணமாக ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்ட மனிதன், பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்ததோடு புசிப்பதற்காக முகத்தின் வேர்வையால் ஆகாரம் பூசிக்கவேண்டியதாயிற்று. வெளியின் பயிர்வகைகளை ஆகாரம் ஆக்கும்படிக்கு நிலத்தை பண்படுத்துவதற்காகவும் தேவன் மனிதனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். வாழ்க்கையில் வீழ்ந்து போன மனிதன், தேவனுடைய வேலையைச் செய்வதற்குப் பதிலாக அன்றாட வாழ்வின் தேவைகளுக்காக கடினமாக உழைக்க வேண்டியவனாக மாறுகிறான்.
ஆனால் ஞானஸ்நானம் பெற்று தேவனிடம் திரும்பும் மனிதன் தேவனுடைய நேசகுமாரன் ஆகிறான். ஆகையால், அவர் அவனை அன்றாட வாழ்க்கையின் கடின உழைப்பிலிருந்து விடுவித்து, பிரியமானவனுக்கு நித்திரையில் தேவையானதை அளிக்கிறார். (மலையாள வேதாகமம்). மனிதன் நிலத்தில் விதையை விதைத்து, இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, பூமி தானாகவே முன்பு முலையையும், பின்பு கதிரையும் கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாக கொடுக்கும். பிதாவாகிய தேவன் தம்முடைய பிள்ளைகளின் தேவைகளை வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே அறிவார். தேவனுடைய ராஜ்யத்தைத் தேடும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்பதற்கும், குடிப்பதற்கும், உடுத்துவதரற்கும் தேவையான அனைத்தையும் தேவன் கொடுக்கிறார். இவ்வாறு, தேவனுடைய பிள்ளையாக மாறிய ஒரு மனிதனை வீணான அன்றாட வாழ்வின் கடின உழைப்பிலிருந்து விடுபட்டு வாழ தேவன் உதவி செய்கிறார். எனவே, கர்த்தருடைய இந்த பிரியமான சகோதர்கள் கர்த்தருடைய வேலையில் படும் பிரயாசம் விருதாவாகாமல் எப்போதும் கர்த்தருடைய கிரியையிலே பெருகுகிறவர்களாயிருக்க வேண்டும். இதற்காக தான் தேவன் கிறிஸ்துவின் மூலம் நம்மைப் பலப்படுத்துகிறார்.
இயேசு கட்டளையிட்டக் கிரியைகளை முடிவுபரியந்தம் கைக்கொள்ளுக்கிறவன் இயேசு பெற்றது போல அதிகாரம் பெறுவான். அவர்கள் தான் தேவனுடைய சிங்காசனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அல்லது இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி பிதாவின் சித்தத்தைச் செய்கிறவர்கள் புத்தியுள்ளவர்களாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள். ஆகையால், தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கை என்று கூறுவது அன்றாட வாழ்வின் காரியங்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து வாழுகிற ஒரு சாதாரண வாழ்க்கை அல்ல. நாம் எதை செய்தாலும், கர்த்தருக்குக் கென்று மனப்பூர்வமாய் செய்து சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவோம் என்று அறிந்து கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு சேவை செய்யும் வாழ்க்கை தான் தேவை. ஏனென்றால், விரைவில் வரவிருக்கும் கிறிஸ்துவிடமிருந்து நமது கிரியைகளின்படி அளிக்கும் பலனைப் பெற நாம் காத்திருக்கிறோம். நம் கிரியைகள் அந்த நாளில் நிலைத்திருந்தால் மட்டுமே நமக்கு கூலி கிடைக்கும். நம் கிரியர்கள் வெந்து போனால் நஷ்டமாகும். ஆகையால், நம்மைப் பலப்படுத்தும் கிறிஸ்துவில் பலமுள்ளவர்களாக இருந்து எப்போதும் கர்த்தருடைய கிரியையிலை பெருகி வருவோம்.
நாம் தேவனில் பெலன் கொள்ளுகிறவர்களாய் இருந்து பலத்தின்மேல் பலன் பெறாதவராயும் கர்த்தருக்கு காத்திருந்து புதப்பெலன் அடையாதேயும், பெலவீனப்பட்டவர்களாய் வாழ்ந்தால் நம்முடைய வாழ்க்கை பரிதாபகரமாய் மாறும். மனைவியானவள் பெலவீன பாண்டம் என்று கூறப்படுகிறது. நம்முடைய பலவீனமாகிய தெலீலாவின் மடியில் நித்திரை செய்பவர்களாக நாம் வாழ்ந்தால் சிம்சோனைப் போல நமக்கு இருக்கும் பலத்தை கூட இழந்து, நாம் பிசாசினால் பிடிக்கப்படுவோம். ஆதாமை பிசாசு அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு கடினமாக உழைக்கச் செய்தது போல நாமும் மாற்றப்படும். சிம்சோனின் கண்கள் பிடுங்கப்பட்டு, வெண்கல விலங்குப்போட்டுச் சிறைச்சாலையில் மாவரைக்க வைத்ததைப்போல நாமும் ஆவோம். நம் வாழ்நாள் முழுவதும் நம்முடைய பரலோகத் தரிசனத்தை நஷ்டமாக்கி தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு அந்நியர்களாகி, பிசாசின் சிறைசாலையில் மாவு அரைத்து, கடின உழைப்பாளிகளாக மாறுவோம். சிம்சோன் தனக்காக மாவு அரைப்பதில்லை, மற்றவர்களுக்காக கடினமாக பிரயாசப்படுகிறான். நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை இழந்து, நம் அன்புக்குரியவர்களுக்காக வீணான அலுவல்களில் பாடுபடுகிறோமா? தேவனுக்குப் பிரியமானவர்கள் அனுபவிப்பதற்காக செல்வத்தைச் சேகரிக்கும் சிரமத்தை தேவனும் பாவிகளுக்குக் கொடுக்கிறார். இயேசு எப்போதும் தேவனுக்கு பிரியமான காரியங்களைச் செய்து வாழ்ந்தார். இதை போன்ற செயல்களைச் செய்யாமல் பாவச் செயல்களைச் செய்து தேவனுக்கு பிரியமில்லாதவர்களாக மாறினால், அந்த நபரை பிசாசும் பின்னர் தேவனும் பாடுகளை கொடுத்து அந்த நபரின் உலக வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாகும். வாழ்க்கையின் தேவைகளுக்காக பாரமடைபவர்களுக்கு கர்த்தருடைய வருகையும் கண்ணியாக மாறுகிறது.
தேவன்தான் நமக்கு ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலன் தருகிறார். அந்த பெலனைப் பயன்படுத்தி, மதிகேடன் தனக்காகவே பொக்கிஷங்களை பெருக்குகிறான். ஐசுவரியமுள்ளவனை போல உண்டும் குடித்தும் சந்தோஷித்து அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்து நரகத்திற்குத் தகுதியானவராகிறார்கள். ஆனால் புத்தியுள்ளவன், இயேசுவின் வார்த்தைகளின்படி, தேவனுக்கு பிரியமுள்ள செயல்களைச் செய்து, தேவனிடத்தில் ஐசுவரியமுள்ளவனாக தேவனின் ராஜ்யத்தில் பிரவேசிக்கிறான். தங்களுக்கு கிடைத்த தேவ வல்லமையையும் தேவ கிருபையையும் பயன்படுத்தி நன்றாக கிரியை செய்து, இரட்டிப்பாக சம்பாதித்து, நல்ல ஊழியர்களாக மாறி எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கிறான். ஆனால் பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியகாரனோ பிரியோஜனமற்ற ஊழியகாரனாக புறம்பான இருளில் தள்ளப்படுவான். ஆன்மீக வாழ்க்கையில் சோம்பல் தேவ பிள்ளைகளைப் பொல்லாதவர்களாக ஆக்குகின்றன. பொல்லாதவர்கள் என்றால் என்ன?ஆவிக்குரியதும் பூமிக்குரியதுமான அனுபவங்களை ஆசீர்வாதமாக தரும்படிக்கு தேவன் வல்லமையுடைய ஜீவனுள்ள தேவன் என்று விசுவாசியாமல், ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்தோடே அன்றாட வாழ்வின் தேவைகளுக்காக பாடுபடுவது தான் அவர்களுடைய பொல்லாதவைகள் ஆகும். ஆகையால், நாம் பொல்லாதவர்கள் ஆகாமல் பிரியமுள்ளவர்களாய் தேவனுக்கு பிரியமான கிரியைகளை செய்து வாழ்வதற்கு தேவன் நமக்கு வல்லமை தந்து பலப்படுத்துவாராக.