சீஷத்துவத்தின் மேன்மை (யோவான் 13:34-35)
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
சீஷத்துவத்தின் மேன்மை
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் நான் உங்களில் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். என்கிற புதிதான கட்டளையை உங்களுக்கு கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாவரும் அறிந்து கொள்வார்கள் (யோவான் 13:34-35).
நாம் இயேசுவின் சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்ள நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்று இயேசு நம்மோடு சொல்லுகிறார். எப்படி அன்பாயிருக்க வேண்டும் என்பதை காண்பிக்க, இயேசு நம்மில் எப்படி அன்பாயிருந்தாரோ அந்தப்படியே ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் என்று ஞாபகப்படுத்துகிறார். அதாவது நம்முடைய மனுஷிகபிரகாரமாக ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தால் போதாது இயேசு நம்மில் எப்படி அன்புகூர்ந்தாரோ அதுபோலவே நாமும் அன்பு கூற வேண்டும்.
மனுஷிகமாக என்று சொல்லும்போது, மத்தேயு 5:43,46,47 ல் உள்ள வசனங்களில் நாம் கவனித்தால் நேசிக்கிறவர்களையே நேசிப்பதும் பகைக்கிறவர்களை பகைக்கவும் செய்கிற நிலவரமாகும். இப்படிப்பட்ட அன்பு ஆயக்காரரும் மற்ற புறஜாதிகளும் காண்பிக்கிற மனுஷிகமான அன்பு ஆகும். இதைப் போல அல்ல நாம் அன்புகூற வேண்டியது. பிதாவாகிய தேவன் இயேசுவில் அன்பு கூர்ந்தது போலவே நம்மிலும் இயேசு அன்புள்ளவராகவே இருக்கிறார் (யோவான் 15:9). அதைப்போலவே நாமும் மற்றவர்களில் அன்புள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறார். லூக்கா 6:27-35 வசனங்களில் தேவன் நம்மில் எவ்விதம் அன்புள்ளவராய் இருக்கிறார் என்பதை இயேசு காண்பிக்கிறார். அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே (லூக்கா 6:35). அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்க பண்ணி நீதியுள்ளவர்கள் மேலும் அநீதி உள்ளவர்கள் மேலும் மழையை பெய்ய பண்ணுகிறார் (மத்தேயு 5:44-45). ஆகையால் நாமும் நமது சத்துருக்களை நேசித்து அன்பின் கிரியைகளாக பகைப்பவர்களுக்கு நன்மை செய்தும் சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தும் (லூக்கா6:27,28) உபத்திரவபடுத்துகிறவர்களுக்காக ஜெபித்தும் (மத்தேயு5:44) ஒரு கன்னத்தில் அரைகிறவனுக்கு மறு கன்னத்தைக் காண்பித்தும் அங்கியை எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு வஸ்திரத்தையும் எடுத்துக் கொள்ள தடை பண்ணாமல் உன்னிடத்தில் கேட்கிறவனுக்கும் கொடுத்து உன்னுடையதை எடுத்துக் கொள்கிறவனிடத்தில் அதை திரும்ப கேளாமலும் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்தால் (லூக்கா6:29-35) உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருந்து, ஜீவித்து மற்றவர்களையும் இந்த தேவஅன்பிற்கேற்றபடி அன்பு கூறுகிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் நம்மேலுள்ள அன்பை வெளிப்படுத்தியது நாம் பெலனற்றவர்களும் அக்கிரமக்காரரும் சத்துருக்களுமாயிருக்கும் போதுதானே தமது அன்பை விளங்க பண்ணினார் (ரோமர்5:6-10). ஆகையால் நாம் நம்மில் அன்பு கூறுகிறவர்களில் மட்டும் அன்பு கூறாமல் சத்துருக்களையும் நம்மை பகைக்கிறவர்களையும் துன்பப்படுத்துகிறவர்களையும் சுருக்கமாக எல்லாரையும் நேசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.
இனியும் தேவனுடைய அன்பின் மற்றொரு விசேஷத்தைப் பார்க்கமுடியும். மனுஷிகமான அன்பு என்பது தற்காலிகமானது. அன்பு கூறுகிறவர்களிடத்தில் அன்பாயிருப்பார்கள் ஆனால் அவர்கள் வெறுக்கும் போது அவர்கள் மேல் அன்பு கூறாமல் அந்த அன்பு இல்லாமலேபோகும். ஆனால் தேவனுடைய அன்பு அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பின்பு சத்துருக்களாய் மாறினாலும் அந்த அன்புக்கு மாற்றமில்லை. தேவஅன்பு ஒருக்காலும் ஒழியாது (1கொரிந்தியர் 13:8), அந்த அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் (1கொரி 13:13). ஆகையால் தேவனுடைய அன்பு இயேசு நம்மில் அன்புள்ளவராய் இருந்தது போல முடிவு பரியந்தம் அன்புகூறுவதேயாகும். ஆம்! இயேசு இவ்வுலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் அன்புள்ளவராக இருந்தார். (யோவான் 13:1).
இது நமக்கு எப்படி சாத்தியமாகும்? இயேசு எவ்விதம் வெளிப்படுத்தினார் என்று நாம் கவனித்துப் பார்த்தால் நமக்கும் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இயேசு இவ்வுலகத்தை விட்டு பிதாவினிடத்துக்கு போகும்படியான தம்முடைய வேளை வந்தது என்று அறிந்தபோது தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் என்று வெளிப்படுத்தும்படிக்கு போஜனத்தை விட்டு எழுந்து வஸ்திரங்களை கழற்றி வைத்து ஒரு சீலையை எடுத்து அரையில் கட்டிக்கொண்டு சீஷர்களுடைய கால்களை கழுவவும் தான் கட்டிக் கொண்டிருந்த சீலையினாலே துடைக்கவும் தொடங்கினார் (யோவான் 13:1,3-5). இந்த செய்கையை நாம் கவனித்தால், தாவீதின் மனைவியாகும்படிக்கு கொண்டு போகப்பட்ட அபிகாயில் ஊழியக்காரரோடு சொல்லுகிறாள் “இதோ நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களை கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள்” என்றாள் (1சாமுவேல் 25: 40,41). இங்கே நாம் கவனித்து பார்க்கும்போது எஜமானனின் கால்களை சந்தோசத்தோடு பலரும் கழுவுவார்கள் ஆனால் ஊழியக்காரர்களின் கால்களை கழுவும் பணிவிடைக்காரி என்று சொல்லுவது அவள் தன்னை மிகவும் தாழ்த்தி சொன்னால் என்று தெரிகிறது. சுருக்கமாக இயேசு தன்னுடைய சீஷர்களுடைய என்றல்ல அவர்கள் இயேசுவை போதகரென்றும் (ரபி), கர்த்தாவே (எஜமானனே) என்றும் கூப்பிடுகிறதினால் தன்னுடைய சீஷர்களுடைய கால்களை கழுவுகின்ற (அடிமை) பணிவிடைக்காரரானார். அவர் தேவனுடைய ரூபமாக இருந்தும் தேவனுக்கு சமமாய் இருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத்தாமை வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (பிலிப்பியர் 2:6-7). இயேசு இங்கே ஒரு அடிமை அதாவது தாசனாக காணப்படுகிறார். ஏன் இயேசு தாசனானார் என்று கேட்டால், அடிமையாக விற்கப்பட்ட ஒரு எபிரேயன் தான் விடுதலையாகக்கூடிய சூழ்நிலை வரும்போது அந்த அடிமையானவன் என் எஜமானையும் என் எஜமானன் எனக்குத் தந்த பெண் ஜாதியையும் என் பிள்ளைகளையும் நான் நேசிக்கிறேன் நான் விடுதலைபெற்று போக மனதில்லையென்று மனப்பூர்வமாய் சொல்வானானால் தன்னுடைய எஜமானன் அவன் காதை கம்பியினால் குத்தி அவன் என்றைக்கும் அவனுடைய வேலைக்காரன் ஆக்கப்படுவதை காண்பிக்கிறது (யாத்திராகமம் 21:1-6). வேலைக்காரன் எஜமானை விட்டு பிரிந்து மற்றொரு மனைவியையும் பிள்ளைகளையும் எடுக்க முடியுமென்றாலும் தன்னுடைய எஜமானையும் அவன் கொடுத்த பெண் ஜாதியையும் மக்களையும் முடிவு வரை நேசித்ததினால் அவர்களை விட்டுப்போகாமல் என்றைக்கும் அவர்களோடுகூட இருக்கும் அடிமையாவான். பிதாவாகிய தேவன் தன்னிடத்தில் தந்தவர்களை (யோவான் 6:37-39, 10:27-29) முடிவுபரியந்தம் நேசித்ததினால் இயேசு தான் அடிமையின்ரூபம் எடுத்து அவர்களுடைய கால்களை கழுவினார் (யோவான்13:4-5). அப்படியானால் ஒழிந்துபோகாததும் நிலைநிற்கிறதுமான அன்புள்ளவர்களாக நாம் ஒருவரில் ஒருவர் முடிவுபரியந்தம் அன்பு கூறும்படிக்கு அடிமைகளாகிய ஊழியக்காரர்களாக என்றைக்கும் மாறவேண்டும்.
இவ்விதமாக அன்பினால் அடிமைகளாக்கப்படுகிற அன்பின் விசேஷத்தை நாம் படிக்கும்போது இயேசு நம்மில் அன்பாயிருக்கிறது போல நாமும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும் (யோவான்15:12 ). பிதா தன்னில் அன்பாயிருந்தது போல நானும் உங்களில் அன்பாய் இருக்கிறேன் என்று சொல்லி என்னில் நிலைத்திருங்கள் என்றும் இயேசு சொல்லுகிறார் (யோவான்15:9,10). நாம் எப்படி இயேசுவில் நிலைத்திருக்க முடியுமென்று சொன்னால் இயேசு பிதாவினுடைய கற்பனைகளை கைக்கொண்டு பிதாவில் நிலைத்திருந்தது போல நாமும் இயேசுவின் கற்பனைகளை கைக்கொண்டு இயேசுவில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே. யோவான் 14:15, 21-24, 15:15 இவ்வசனங்களில் இயேசுவின் இடத்தில் அன்பாயிருக்கிறவன் கற்பனைகளையும் வசனங்களையும் பெற்றுக் கொண்டு கைக்கொள்ளுகிறவனாயிருப்பானென்று இயேசு சொல்லுகிறார் ( யோவான் 2:6-8). பிதாவின் கற்பனைகளை கைக்கொண்டு தான் கற்பித்த எல்லா காரியங்களிலும் முடிவுபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தம் கீழ்படிந்தவராகும்படி அடிமையின் ரூபமெடுத்தார் (பிலிப்பியர்6:8). சங்கீதம்40:6-8 எபிரேயர்10:5-7 ல் நாம் காண்பது போல சர்வாங்க தகனபலியும் பாவநிவாரணபலியும் விரும்பாமல் புத்தகச் சுருலில் தன்னைக் குறித்து எழுதியிருக்கிறபடி தேவனுக்கு பிரியமானதை செய்ய விரும்புகின்ற இயேசுவுக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணி இருக்கிறீர் என்று எபிரேயர் நிருபத்தில் சொல்லும்போது சங்கீதத்தில் காதுகளை குத்தினார் என்று சொல்லுகிறது. அதாவது பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற மனுஷசாயலில் வந்த இயேசு காதுகள் குத்தித் துளைக்கப்பட்டவராக தன்னைத்தான் தாழ்த்தி சிலுவையின் மரண பரியந்தமும் பிதாவின் சித்தம் முழுவதும் செய்து நிறைவேற்றினார் (ஏசாயா 53:10). வேத வாக்கியங்களை நிறைவேற்றி கீழ்ப்படுதலுள்ளதாசனாக விளங்கினார் (யோவான் 19:28-30). இயேசுவின் மேல் அன்புள்ளவர்களாக இயேசுவின் கற்பனைகளை கைக்கொண்டு அன்பில் நிலைத்திருக்க இயேசுவைப்போல அடிமையின் ரூபமெடுத்து முடிவுபரியந்தமும் கீழ்படிதல் உள்ள அடிமையாகக் காணப்பட வேண்டும்.
இனியும் இயேசு, பிதாவின் கற்பனைகளை கைக்கொண்டு பிதாவின் அன்பில் நிலைத்திருந்தது போல நாமும் இயேசுவின் கற்பனைகளை கைக்கொண்டு இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கிறோம். பிதா இயேசுவில் அன்பு கூர்ந்தது போல இயேசு நம்மில் அன்பு கூர்ந்தார். இயேசு நம்மில் அன்பாயிருந்தது போல நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்து கொண்டு சகோதர சிநேகத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் (யோவான் 13:34) நாமும் இயேசுவைப்போல (தாசன்) அடிமையின் ரூபமெடுக்க வேண்டும். அதுவும் காதுகள் குத்தி துளைக்கப்பட்ட என்றைக்கும் உள்ள அடிமையாக (வேலைக்காரன்) மாற்றப்பட்டாலே முடிவு பரியந்தம் அன்பாயிருக்க முடியும். இளைஞரே மூப்பர்களுக்கு கீழ்ப்படியுங்கள் என்பது அன்பின் குணாதிசயத்தில் எல்லாவரையும் நேசித்து கீழ்படிதல் ஆகும் (1பேதுரு 5:5). நல்லவர்களுக்கும் சாந்தகுணம் உள்ளவர்களுக்கும் மாத்திரமல்ல முரட்டுகுணம் உள்ளவர்களுக்கும் கீழ்படிந்திருங்கள் என்று ஒரு கூட்டத்தாரோடு மாத்திரம் சொல்வது அல்ல (1பேதுரு 2:18). னாங்கள் எல்லாவரும் ஒருவருக்கொருவர் கீழ்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொண்டு தாசனாக (அடிமையாக) மாற வேண்டும் (1பேதுரு 5:5). என்பது தேவனுடைய நோக்கம். அன்பினால் நிறைந்தவர்களாக ஒருவரில் ஒருவர் அன்பில் நிலைத்திருக்க விரும்புகிறவர்கள் ஒருவருக்கொருவர் அடிமைகளாக (வேலைக்காரர்களாக) இருப்பார்கள். ஒருவன் மற்றவனையும் மற்றவன் மறுபடியும் அன்புகூர்ந்து என்றைக்கும் அன்பாயிருந்து கீழ்ப்படிகிற, இரக்கமுடைய, உதவிசெய்கிற, சகிக்கிற தாசர்களாவார்கள். அன்பின் சத்தியவசனங்கள் எல்லாவற்றையும் பூரணமாக நிறைவேற்றும் அனுபவம் ஆகும் (1கொரிந்தியர் 13:4-8).
ஒரு கதை இப்படி இருக்கிறது. பரலோகத்தில் மிகப்பெரிய விருந்து ஒன்று நடக்கிறது. அதில் ருசியாகவும் பலவிதமான நல்ல ஆகாரமும் மேசையின்மேல் ஆயத்தமாக்கி வைக்கப்பட்டிருந்தது. பரலோகவாசிகளுடைய கைகள் அவர்களுடைய கைமுட்டுகள் மடக்க முடியாதபடிக்கு நீண்ட கரண்டிகளால் வைத்து கட்டப்பட்டிருந்தது. கரண்டியினால் அவர்கள் சுயமாக சாப்பிட முடியவில்லை. ஆனால் அவர்கள் அன்பில் பூரணமானவர்களானபடியால் சகோதரத்துவத்தில், அன்பில் நிறைந்தவர்களாயிருந்ததினால் அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அவர்கள் தங்கள் பணிவிடைக்காரராய் ஒருவரில் ஒருவர் ஆகாரம் வாரி கொடுத்துக்கொண்டு அந்த விருந்தினை மகிழ்ச்சியோடு புசித்தார்கள்.
இயேசு தான் அன்பு கூர்ந்தவர்களை முடிவு பரியந்தம் அன்புள்ளவராய் அவர்களுடைய பணிவிடைக்காரராகியது போல நாமும் ஒருவரில் ஒருவர் பணிவிடைக்காரராக ஒருவருக்கொருவர் பொருத்தும் சகித்தும் கீழ்ப்படிந்தும் ஆதரவுடையவர்களாக உதவிசெய்தும் அன்புகூர்ந்தும் வாழ்கிறவர்களாக இருந்தால் நாம் நம்முடைய இயேசுவின் சீஷர்கள் என்று நம்மை நாமே உலகத்துக்கு வெளிப்படுத்தி காண்பிக்க முடியும். நம்முடைய பிதாவாகிய ஆண்டவர் இந்த அனுபவங்களுக்கு நம்மை தகுதி உள்ளவர்களாக்கி தம்முடைய பூரண ஆசீர்வாதத்தினால் நிறைத்து தம்நாமத்தை நம் மூலம் மகிமைப்படுத்துவாராக.