தீய சிங்காசனத்தோடு உடன்படிக்கையா? (1 சாமுவேல் 11:1)

தேவனுக்கு மகிமை!!

தீய சிங்காசனத்தோடு உடன்படிக்கையா?

அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே  உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 1 சாமுவேல் 11:1

கீலேயாத்தில் உள்ள யாபேஷின் குடிகள் இஸ்ரவேல் புத்திரருக்குள் அடங்குவர்; அவர்கள் தேவ மக்களுடைய கூட்டத்தில் சேர்க்கப்பட்ட விசுவாசிகளின் ஒரு குழுவின் நிழலாக இருக்கிறார்கள். நாம் கீலேயாத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​கானான் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள இஸ்ரவேல் மக்கள் வந்தபோது, ​​யோர்தான் நதிக்கரைக்கு முன்பாக அவர்கள் கைப்பற்றிய தேசத்தில் அதுவும் அடங்கும். அது ஆடு மாடுகளுக்கு தகுந்த இடம் என்று கண்டு ரூபனியர், காதியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார் அந்த நாட்டை காணியாட்சியாகக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக  என்றார்கள் (எண்ணாகமம் 32:1-5, 28-33, 40). அவர்களுடைய வேண்டுகோளின்படி மோசே அந்த நாட்டை அவர்களுக்குக் கொடுத்தார். நாம் இதை ஆவிக்குரிய ரீதியில் கருத்தில் கொள்ளும்போது, ​​பரலோக கானானை நோக்கிய பயணத்தின் நடுவில், அவர்கள் இந்த உலகமாகிய கீலேயாத் தேசத்தைக் பார்த்து அது தங்களுக்கு அல்ல, மாறாக அவர்களுடைய செல்வங்களுக்கு (ஆடு மாடுகளுக்கு) நல்ல தேசம் என்று கண்டு யோர்தானைக் கடந்து பரலோகமாகிய கானானுக்குச் செல்ல இந்த உலகத்தை விட்டுப் போக சிந்தை இல்லாதவர்களுக்கு நிழலானவர்கள்.

யோர்தானைப் பற்றி நாம் புரிந்துகொள்ளும்போது, ​​அதன் சிறப்பு என்னவென்றால், அது அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம் (யோசுவா 3:15). இஸ்ரவேலர்கள் யோர்தானைக் கடந்து சென்றபோதும் யோர்தான்  கரையெங்கும் புரண்டது ​என்று காணலாம் (யோசுவா 4:18). எனவே, இஸ்ரவேல் மக்கள் அறுப்புக் காலத்தில் கானானுக்குள் நுழைந்தனர். அறுப்பு என்பது உலகித்தின் முடிவாகக் கூறப்படுகிறது இயேசு அறுப்புக் காலத்தில்  களைகளாக தமது ராஜ்ஜியத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமம்ஞ் செய்கிறவர்களையும் சேர்த்து அக்கினி சூளையில் போடும்போது நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்தில் சூரியனைப் போல பிரகாசிப்பார்கள் என்று கூறப்படுகிறது (மத்தேயு 13:39-43). அவர்களுடைய மறுரூபமான சரீரத்திலுள்ள தேவனுடைய மகிமை அவர்களைப் பிரகாசிக்கச் செய்கிறது (மத்தேயு 17:2). எனவே,அறுப்புக் காலமாகிய வாழ்க்கையின் முடிவில் யோர்தான் என்கிற மரணத்தை கடந்து ​​தேவனுடைய ராஜ்யமாகிய கானான் தேசத்திற்குள் பிரவேசிக்க முடியும். அறுப்பு பயிர் விளைந்ததைக் அறுக்கிறதுக்கு காட்டுகிறது (மாற்கு 4:29). நம்முடைய வாழ்க்கை விலையுயர்ந்த நற்பலனாகும்போது (யாக்கோபு 5:7) கர்த்தருடைய வருகையில் பயரிடுகிறவனாகிய கர்த்தரால் களஞ்சியமாகிய நித்தியத்தில் சேர்க்கப்படும் அனுபவம் நமக்கு உண்டாகும் (மத்தேயு 3:12).

ஆகையால், கீலேயாத்தின் குடிகளைப் பற்றி நாம் சிந்திக்கும் போது  இவ்வுலகின் செழிப்பைக் கண்டு, இவ்வுலகிலேயே வாழ அவர்கள் ஆசைப்படுபவர்கள். தேவனுடைய ராஜ்யத்தின் களைகளாய் இருக்கிற உலகத்தார் மரணத்தினால் இவ்வுலகை விட்டுப் பிரிய வேண்டும் என்ற தெளிவின்றி, இந்தப் பூமியில் நித்தியமாக வாழ்வதற்கு உற்சாகப்படுத்திக் கொள்கிறார்கள். கீலேயாத்தின் குடிகளான ரூபனியர் (ஆதியாகமம் 29:32), காதியர் (ஆதியாகமம் 30:10-11) மற்றும் மனாசேயர் (ஆதியாகமம் 41:51) ஆகியோர் இஸ்ரவேல் மக்களில் முதற்பேறானவர்களாகப் பிறந்த சந்ததியினர் ஆவர். பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபையில் உள்பட்டவர்களுக்கு நிழல் (எபிரேயர் 12:23). பரலோக கானானின் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அதாவது புதிய எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்தில் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ளும்படி தேவனால் அழைக்கப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்டு, மகிமைபடுத்துவதற்கு நடத்தப்பட்டவர்கள் (ரோமர் 8:30). இருப்பினும், கிலேயாத்தென்கிற இந்த உலகத்தில் நிரந்தர வாசத்தை விரும்பி பரலோக கனானில் கொண்டு போக வேண்டாம் என்று கூறி கிலேயாத்தியர் அல்லது உலகத்தார் என்று அறியப்பட்டு வாழ்பவர்கள். அவர்கள் தேவனுடைய ஜனங்கள் என்றோ இஸ்ரவேலர்கள் என்றோ அழைக்கப்படுவதை விரும்பவில்லை (ஏசாயா 44:5).

அம்மோனியனான நாகாஸ் கீலேயாத்தின் குடிகளோடு யுத்தம் செய்வதற்கு முற்றிக்கைபோட்டான். அம்மோனியர்களை குறித்து படிக்கும்போது மோவாபியர்களும் அம்மோனியர்களும் லோத்தின் இரண்டு குமாரத்திகளுக்குப் பிறந்தவர்கள் (ஆதியாகமம் 19:36-38). இஸ்ரவேலர்களின் வனாந்தரப் பயணத்தின் இறுதிவரை, அவர்கள் தேவனுடைய இரக்கத்தையும் பராமரிப்பையும் பெற்ற ஜனங்கள். அநேக நாட்களாக வனாந்தரத்தில் சுற்றி திரிந்து கனானுக்கு பிரயாணம் செய்த இஸ்ரவேல் மக்கள் ஆர் என்ற மோவாப் பட்டணத்தின் வழியாக கடந்து போகும்போது தேவன் அந்த தேசத்தை லோத்தின் மக்களுக்கு சுதந்திரமாக கொடுத்திருந்ததினால் அவர்களை வருத்தப்படுத்தக் கூடாது, அவர்களோடு போர் செய்யவும் வேண்டாம் என்று கூறினார். அம்மோனியர்களின் அந்த தேசம் இஸ்ரவேல் மக்களுக்கு சுதந்திரமாக கொடுக்கப்படாது என்று தேவன் கூறுகிறார் (உபாகமம் 2:16-19). ஆனால் பின்னர், அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகச் செயல்பட்டபோது, ​​தேவன் அவர்களுக்கு விரோதமானார். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது, ​​அவர்களை அப்பத்தோடும் தண்ணீரோடும் ஏற்றுக்கொள்ளாததாலும், அவர்களைச் சபிக்கும் பொருட்டு வெகுமானத்திற்காக பிலேயாமை அழைத்ததாலும், தேவன் அவர்களுக்கு விரோதமாய்ச் செயல்பட்டார் (உபாகமம் 23:3-6). அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர்கள் தோல்வியுற்ற காலத்தில் அது நல்லது என்று கூறி கை கொட்டி காலால் தட்டி வர்மம் வைத்து ஆகடியம் பண்ணினபடியால் தேவன்அவர்களை அழிப்பேன் என்றார் (எசேக்கியேல் 25:1-7). உண்மையில், இவர்கள் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் காட்டுகிறது. நாகாஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் சர்ப்பம். ஏதேன் தோட்டத்தில் அவர்கள் தள்ளப்பட்ட பிறகு, ஆதாமின் வீழ்ச்சியில் சந்தோஷப்பட்ட பழைய சர்ப்பமாகிய சாத்தான் (வெளிப்படுத்தல் 12:9). அவனுடன் இருந்த தள்ளப்பட்ட  தூதர்களைப் பற்றி நாம் படிக்கும்போது தங்களுடைய ஆதிமேன்மையை காத்துக் கொள்ளாமல் தேவன் அவருக்கு கொடுத்த தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு போன தூதர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது (யூதா 1:6). இன்றும்  சில நபர்கள் நித்தியத்தில் தங்களுடைய நித்திய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு சாத்தானின் தூதர்களாக வாழ்கிறார்கள். பிசாசைப் போல, அவர்கள் தேவ மக்களுக்கு விரோதமாக குற்றம் சுமத்தும்பொருட்டு  அவர்கள் மேல் குற்றஞ்சாட்டி அவர்களுடைய தோல்விகளில் சந்தோஷப்படுவர்கள்  (வெளிப்படுத்துதல் 12:10). சாத்தானை அகாதமான பாதாளத்தில் தள்ளப்படும்போது (ஏசாயா 14:15) தேவன் இவர்களையும் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியில்  தள்ளுவார் (மத்தேயு 25:41). ஆனால், இவர்கள் இப்படியாக எரியப்படும்போது அவர்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் அறையிலே மகிமையோடு கிடத்தப்பட்டு  இளைப்பாறுவார்கள் (ஏசாயா 14:18-19).

நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொண்டு பிசாசினோடும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் போர்ச் செய்பவர்கள் (எபேசியர் 6:11-12). ஆனால், கிலேயாத்தியராகிய யாபேஷ் குடிகளோ, தங்களுக்கு எதிராக வந்து முற்றுகைபோட்டவர்களோடு யுத்தம் செய்யாமல்  நாகாசனுடன் உடன்படிக்கை செய்து அவர்களை சேவிப்பதற்கு விரும்பினார்கள் (1 சாமுவேல் 11:1). அது அவர்களுடைய பிரச்சனையல்ல; அவர்கள் இருக்கும் கிலேயாத் தேசம் உடன்படிக்கையின் தேசம். அதுவே, தேவனுக்குப் பயந்த யாக்கோபை வைத்து லாபான் உடன்படிக்கை செய்த இடம் (ஆதியாகமம் 31:44-47). கிலேயாத் மலையில்  கூடாரத்தை போட்டு அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள் (ஆதியாகமம் 31:25). இந்த உலகத்தில் வாழ்ந்து இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசுனுடன் அவனுடைய தீய சிங்காசனத்துடன் இசைந்திருக்கிற அனுபவம் (சங்கீதம் 94:20). உலகத்தாராயிராதவர்களுக்கே உலகத்தை எதிர்த்து நிற்க முடியும். அவர்களை உலகம் பகைக்கிறது (யோவான் 15:19). ஆனால், இவ்வுலகத்திற்கு நண்பனாக இருக்க விரும்புகிற அவர்கள் தேவனுக்கு சத்துருக்கள் என்று அறியாமல் இந்த  உலகத்தின் அதிபதியுடன் உடன்படிக்கை செய்கிறார்கள் (யாக்கோபு 4:4). அவர்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்க உற்சாகமுள்ளவர்கள் (ரோமர் 12:2). இந்தச் சூழ்நிலையில், தேவனுடைய மக்களாகிய நாம் நினைவுகூற வேண்டியதும் கீலேயாத்தியராகிய யாபேஷ் குடிகள் மறந்ததுமான ஒரு காரியத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது லாபான் யாக்கோபுடன் உடன்படிக்கை செய்வதற்கு முன்பு சொல்லுகிறதான ஒரு காரியம். யாக்கோபுக்கு பொல்லாப்புச் செய்ய லாபானுக்கு வல்லமையுண்டு ஆகிலும் யாக்கோபோடு நன்மையே அன்றித் தீமை ஓன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று தேவன் லாபானுக்குக் கட்டளையிட்ட  காரியம் (ஆதியாகமம் 31:29). சாத்தான் யோபுவை உபத்திரவங்களால் துன்புறுத்தியபோது தேவன் சாத்தானிடம் அவன் பிராணனை மாத்திரம் தப்பவிடு என்றார் (யோபு 2:6). ஆத்துமாவை கொல்ல முடியாமல் சரிதத்தை மாத்திரம் கொள்ளுகிறவர்களுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசுவும்  கூறுகிறார் (மத்தேயு 10:28). ஆதலால் இவர்களுக்கு நாகாசை அல்லது பிசாசை பயப்படத் தேவையில்லை. ஆனால் அவர்கள் உலக சிநேகமுள்ளவர்களாக இருப்பதால் உடன்படிக்கை செய்து உலகத்தின் அதிபதியாகிய பழைய சர்ப்பமாகிய சாத்தானுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்கள்.

ஆனால் நாகாஸ் (பிசாசு) அவர்களுடன் தேவைப்படுவது அவர்களுடைய வலது கண்களைப் பிடுங்கி, அதை இஸ்ரவேல் அனைவர் மீதும் நிந்தை வர பண்ணவேண்டும்  இந்த நிபந்தனையின் பேரில்தான் உடன்படிக்கை செய்வேன் என்று கூறுகிறான் (1 சாமுவேல் 11:2). யாபேஷின் மூப்பர்களிடம் இதைத் தேவைப்படுகிறான் (1 சாமுவேல் 11:3). அவர்கள் மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பர்களாக ஜனங்களை தீமைக்கு வழிநடத்துகிறவர்கள் ஆகையால் அவன் புய முழுதும் சூம்பிப்போம் அவன் வலது கண் முற்றிலும் இருளடையும் என்று தேவன் கூறுகிறார் (சகரியா 11:17). சிம்சோன் தன் எதிரிகளால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அவனது கண்களைப் பிடுங்கி, அவனை விலங்குபோட்டு  சிறைச்சாலையில் மாவரைக்க வைத்தார்கள் (நியாயாதிபதிகள் 16:21). பிசாசு நம்முடைய பரலோக தரிசனத்தை  இழக்கச் செய்து உலகப்பிரகாரமான நன்மைகளுக்காக மட்டுமே வாழும்படி நம்மை உலகத்தாராக மாற்றுவான். அன்றாட வாழ்க்கைக்காகவும் உலகப்பிரகாரமான நன்மைகளுக்காகவும், செல்வத்திற்காகவும் நம்மை கடினமாக உழைக்க வைத்து, நம்மைச் சிறையில் அடைத்து, பிசாசின் அடிமையாக வாழ வைப்பது சாத்தானின் வஞ்சகமாகும் (சங்கீதம் 127:2). அதுமட்டுமல்ல, அவர்களுடைய கண்கள் பிடுங்கப்படும் என்ற எண்ணம் மற்று சிலருடைய இருதயங்களில் எப்போதும் மேலோங்கி இருந்தது (எண்ணாகமம் 16:14). தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை இழந்து போய்விடுமோ என்ற பயத்தோடு வாழும் அனுபவமாகும். அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் ஆவிக்குரிய வறட்சி இருக்கும். யாபேஸ் என்ற வார்த்தைக்கு வறட்சி என்று பொருள். யாபேசின் மூப்பர்கள் அவ்வாறு மகிழ்ச்சியடைந்தபோதிலும், நாகாஸ் இந்த நிந்தையை இஸ்ரவேல் அனைவர் மீதும் வர பண்ண வேண்டும் என்று தேவைப்பட்டான்  (1 சாமுவேல் 11:3). ஆனால் இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உரியவர்கள் என்பதால் தேவன் அதை அனுமதிக்கவில்லை (ஏசாயா 44:5). சவுல் ராஜா இந்த தீமையான செய்திகளைக் கேட்டபோது தேவனுடைய ஆவி அவன்மேல் வல்லமையாக இறங்கி அவனுடைய கோபம் மிகவும் மூண்டது (1 சாமுவேல் 11:6). அவனுக்குப் பின்னால் அவனோடு கூட வந்தவர்களை சேர்த்து அம்மோனியர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்தார்கள் (1 சாமுவேல் 11:11). நம்முடைய ராஜாவும் கர்த்தருமாகிய இயேசு இந்த உலகத்தின் அதிபதியினுடன் எந்த சம்பந்தம் இல்லாதவனும் அவனோடு எந்த உடன்படிக்கையையும் ஏற்றுக்கொள்ளாதாவனும் தான் (யோவான் 14:30). அவர் உலகத்தை ஜெயித்தார் ஆகையால் உலகத்தில் நமக்கு உபத்திரவங்களும் போராட்டங்களும் இருந்தாலும், அவர் நம்மை தைரியப்படுத்தி நமக்கு வேண்டி யுத்தம் செய்து நமக்கு ஜெயத்தை தருகிறார் (யோவான் 16:33). நிச்சயமாகவே, நம்முடைய தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக நமக்கு வெற்றியைத் தருவார் (1 கொரிந்தியர் 15:57).

சவுலுக்கும் சாமுவேலுக்கும் பின்பு வராதவனுடைய காளைகள் அழிக்கப்படும் என்று சவுல் சொல்லும்போது கீலேயாத் தேசம் அவர்களுடைய ஆடு மாடுகளுக்கு ஏற்ற தேசம் என்று கண்டு  கனான் தேசம் வேண்டாம் என்று சொன்ன கீலேயாத்தியரைப் போல ஆகாமல் ராஜாவாய சவுலுக்கும் தேவ ஊழியர்களாகிய சாமுவேலுக்கும் பின்னால் போக வேண்டும் இல்லையென்றால் ஆடு மாடுகள் அதாவது உலக செல்வங்கள் அழிக்கப்படும் என்று புரிந்து கொள்ள வேண்டும் (1 சாமுவேல் 11:6). உலக நன்மைகளை தேவன் அழித்துவிட்டு கடனை வாங்கி கடனாளிகளாய் சபிக்கப்பட்டவர்களாகுவதற்கு காரணம் தேவனுடைய கட்டளைகளைக் கீழ்ப்படியாமல் வாழ்ந்ததினால்  (உபாகமம் 28:44-45). எனவே நாம் அபத்தமான மேய்ப்பர்களாக உலகக்காரராக,உலகத்தை நேசித்து,உலகத்தையும் பிசாசையும் சேவிக்க ஆசைப்படுபவர்களின் பின்னால் நாம் செல்லாதிருப்போமாக. நம்முடைய ராஜாவாகிய  இயேசுவுக்கும், தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்து, தேவன் தங்களோடு இருந்து வழிநடத்தப்படுகிற தேவனுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கும் பின்னால் செல்ல நாம் நம்மை உற்சாகப்படுத்திக்கொள்வோமாக (1 சாமுவேல் 3:19-20, 11:7). அப்பொழுது நாம் இவ்வுலகில் நிந்தைக்குள்ளாகாமல், உலகத்தை ஜெயங்கொண்ட இயேசுவைப் போல ஜெயங்கொள்பவர்களாவோம். நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்குத் துணைபுரிந்து, நம்மை ஆசீர்வதித்து, தமது நாமத்தை மகிமைப்படுத்துவாராக.