எதிராளியோடு சரிக்கட்டுதல் (லூக்கா 18:3)

எதிராளியோடு சரிக்கட்டுதல் (லூக்கா 18:3)
: :

தேவனுக்கு மகிமை

எதிராளியோடு சரிக்கட்டுதல்

"
எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும்" என்று விண்ணப்பம் பண்ணினாள். லூக்கா 18:3

கிறிஸ்தவ வாழ்க்கையில், நமக்கு போராட்டம் உள்ளது மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அதாவது மனிதர்களோடு அல்ல. பிசாசுனுடைய தந்திரங்களோடும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் தான் நமக்கு போராட்டம் உள்ளது (எபேசியர் 6:11-12). எனவே நமது எதிராளி பிசாசு  தான். அவன் கர்ஜிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான் (1 பேதுரு 5:8). நாம் இங்கே கவனித்தால் எல்லாவரையும் விழுங்க சுற்றித் திரிவதில்லை. விழுங்க வேண்டிய நபரை கண்டுபிடித்து விழுங்குவதற்க்காக சுற்றித் திரிகிறான். சபையாகிய ஸ்திரீ பெற்றெடுக்கும் ஆண்பிள்ளையான ஜெயங்கொள்ளும் பரிசுத்தவான்களை பட்சித்துப் போடும்படிக்கு பிசாசு முயற்ச்சிக்கிறான் (வெளிப்படுத்துதல் 12:1-4). கர்த்தருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு ஆவலுடன் உற்சாகமாக ஆயத்தமாகுபவரை விழுங்க அதாவது பட்சித்துப் போடும்படிக்கு பிசாசு சுற்றி திரிந்து கொண்டிருக்கிறான். ஏதேன் தோட்டத்தில் பிசாசு ஒரு தலையுள்ள சர்ப்பமாகதான் வந்தது (வெளிப்படுத்துதல் 20:2). ஆனால் இந்தக் கடைசி நாட்களில்  ஏழு தலைகளுடன் தன் முழு பலத்தோடும் செயல்படும் சாத்தனை காண்கிறோம் (வெளிப்படுத்துதல் 12:3). எனவே, இந்த எதிராளியான  பிசாசிடமிருந்து தேவன் நமக்குக் நியாயம் செய்து விடுவிக்க வேண்டியதாயிருக்கிறது. கடைசிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட வேண்டும் (1 பேதுரு 1:4).

இயேசு மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்த பின்பு தான் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார் (எபிரெயர் 2:14-15). ஆதலால் தேவ குமாரனாகிய கர்த்தருடைய சத்தத்தை கேட்டு தான்  உயிர்தெழுகிற நாளில் மரித்தவர்கள் அனைவரும் பிழைப்பார்கள் (யோவான் 5:25, 28-29). விசேஷமாக நாம் கவனித்தால் எக்காளம் தொனிக்கும் பொழுதுதான், மறுரூபமாக்கப்படுவதற்குத் தகுதியானவர்களின் உயிர்த்தெழுதலும், ஜீவனோடிருக்கிறவர்களின் சரீரங்களின் மறுரூபமாக்கப்படுதலும் நடக்குகிறது (1 கொரிந்தியர் 15:52). தம்முடையவர்களைச் சேர்க்க வரும் கர்த்தரின் வருகையைப் பற்றி நாம் படிக்கும்போது (1 கொரிந்தியர் 15:23) கர்த்தர்  ஆரவாரத்தோடும், பிரதான தூதனின் சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார் (1 தெசலோனிக்கேயர் 4:16-17). இந்த இரைச்சலும் சத்தமும் தேவன் தமது சத்துருக்களை சரிக்கட்டும் கர்த்தருடைய சத்தம் என்று காணலாம். (ஏசாயா 66:6). ஆகையால், கர்த்தருடைய வருகையில் நாம் மறுரூபமாக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப் படும்போது, ​​நம் எதிராளியாகிய  பிசாசினோடு  சரிக்கு சரிகட்டுகிற  சத்தத்தை முழக்கிக் கொண்டு நாம் நித்தியத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறோம்.

ஆனால் தேவன் நியாயம் செய்து விடுவிப்பது யாரை என்றும் எப்படி என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களேத் தான் நியாயம் செய்து விடுவிக்கிறார் என்று வாசிக்கிறோம் (லூக்கா 18:7). இந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் மேலும் படிக்கும்போது, ​​அவர்கள் பிதாவாகிய தேவனின் முன்னறிவின்படி முன்குறிக்கப்பட்டவர்கள், மேலும் தேவனால் அழைக்கப்பட்டு, மனந்திரும்புதல் ஞானஸ்நானம் மூலம் நீதிகரிக்கப்பட்டவர்களும் (ரோமர் 8:29-30) பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்குதலினாலே, தேவ சமூகத்தில் பரிபூரண கீழ்ப்படிதலில் வாழ்கிறவர்களாயிருக்கிறார்கள் (1 பேதுரு 1:2). அதுமட்டும் அல்ல  இயேசுவின் இரத்தம் தெளிக்கப்பட்டு சகல பாவங்களையும் சகல அநியாயத்தையும் நீக்கி தேவனால் கழுகப்பட்டு சுத்திகரிக்கப்பட்டவர்கள் ஆவார்(1 யோவான் 1:7,9). இந்தவிதமான ஆவிக்குரிய வாழ்க்கையை செய்யும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களில் சில பண்புகளை நாம் காணலாம். முதலாவதாக, அவர்கள் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார் (மாற்கு 13:20). அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் (மத்தேயு 22:14). ஆகையால் நாமும் தெரிந்துகொள்ளப்படும் படிக்கு  நம் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக் கொண்டு வாழ்வதற்கு உற்சாகமுள்ளவர்கள் ஆவோம் (2 பேதுரு 1:10-11). இரண்டாவதாக, இந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் தேவனின் பரிசுத்தவான்கள் ஆவார் (கொலோசெயர் 3:12). பலியினாலே தேவனோடு உடன்படிக்கை பண்ணின இந்த தேவனுடைய பரிசுத்தவான்களை தான் அவரிடத்தில் கூட்டிச் சேர்க்கிறார்  (சங்கீதம் 50:5). மூன்றாவதாக, அவர்கள் தேவனுக்கு  பிரியமானவர்களுமாயிருக்கிரார்கள் (கொலோசெயர் 3:12). தேவனின் பிரதிநிதிகளான ஊழியர்களுக்கு நாம் பிரியமும் வாஞ்சையுமாக இருப்பதற்கு உற்சாகமுள்ளவர்களாவோம் (பிலிப்பியர் 4:1). அதினால், தேவனின் தயவைப் பெற்று தேவனின் நேச குமாரர்களாய் நாம் மாறலாம் (மத்தேயு 17:5). கர்த்தருக்குப் பிரியமான இந்த சகோதரர்களை, தேவன் ஆதி முதல் ஆவியின் பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு தெரிந்துக்கொண்டார் (2 தெசலோனிக்கேயர் 2:13). கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பு நித்திய மகிமையோடு இந்த தெரிந்துகொள்ளப்பட்டவரகளுக்குத்தான் கிடைக்கிறது (2 தீமோத்தேயு 2:9). கர்த்தர் தமது தூதர்களை வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடு அனுப்பிதற்கு பின்னர் எதிராளியுடன் சரிக்குச் சரிக்கட்டி  இந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்களை நித்திய இரட்சிப்புக்காக நான்கு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார் (மத்தேயு 24:31).

எதிராளியோடு நியாயம் நடத்தி தேவன் இந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்களை, நித்தியமான இரட்சிப்புக்கு ஆயத்தம் செய்யும்படிக்கு  இந்த தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் இரவும் பகலும் தேவனை நோக்கி கூப்பிடுகிறவர்களாக காணப்பட வேண்டும் (லூக்கா 18:7). ஏனென்றால், இயேசு கிறிஸ்து இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, ​​இனி சம்பவிக்கபோகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவார்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார் (லூக்கா 21:36). இடைவிடாமல் ஜெபிப்பது நம்மைக் குறித்ததான தேவனின் சித்தமகும் (1 தெசலோனிக்கேயர் 5:16-18). அதுமட்டும் அல்ல, தமக்கு பயந்தவர்களின் விருப்பத்தின் படி செய்து, தேவன் அவர்களின் கூப்பிடுதலைக் கேட்டு அவர்களை இரட்சிக்கிறார் (சங்கீதம் 145:19). ஆகையால், நாம் விழித்திருக்கும்போது மட்டுமல்ல, நித்திரைப்பண்ணுபோதும், கதவைத் தட்டுகிற நேசரின் சத்தத்தை கேட்கத்தக்க நம் இருதயம் விழித்திருக்க வேண்டும் (உன்னதப்பாட்டு 5:2). எப்பொழுதும் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும் (லூக்கா 21:36). சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம் பண்ணி வாழ வேண்டும் (எபேசியர் 5:19).

இப்படி இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும் தம்மால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் காரியத்தில் தேவன் நீடிய பொறுமையுடன் இருப்பதைக் காண்கிறோம் (லூக்கா 18:7). தேவனாகிய கர்த்தர் தன்னைப் பற்றி கூறும்போது, ​​அவர் நீடிய பொறுமையுள்ளவர் என்று தெளிவாகக் கூறுகிறார் (யாத்திராகமம் 34:6). அது நம் வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்ட சில விஷயங்களுக்காகவே ஆகும். ஒன்றாவதாக, தேவன் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுள்ளவர்களாகி என்றும் நமது அக்கிரமங்களையும் மீறுதல்களையும் மன்னிக்கிறார் (எண்ணாகமம் 14:17). நமது பலவீனங்களுக்கு அனுதாபம் காட்டும் ஒரு பிரதான ஆசாரியராக, அவர் தனது நீடிய பொறுமையின் மூலம் நமது குற்றம் குறைகளை மன்னிக்கிறார் (எபிரெயர் 4:15). இரண்டாவதாக, நாம் இஸ்ரவேல் ஜனத்தைப் போல கலகம் பண்ணி தேவனோடு தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திய பொழுதும் தேவன் நீடிய சாந்தமுள்ளவனாகயால் நம்மை கைவிடவில்லை (நெகேமியா 9:17). "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று தேவன் கூறுகிறார் (எபிரெயர் 13:5). மூன்றாவதாக, ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாவரும் மனந்திரும்பவேண்டும் என்று விரும்பி தேவன் நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார் (2 பேதுரு 3:9). திருச்சபையும் தனிநபர்களும் மனந்திரும்பி ஆதி அன்பிலும் ஆதியில் செய்த கிரியைகளுக்கும் திரும்ப வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வெளிப்படுத்துதல் 2:4-5). நான்காவதாக, பயரிடுகிறவனாகிய கர்த்தர் நம்மை நற் பலன்களாய்க் காண விரும்பி, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார் (யாக்கோபு 5:7). இதன் மூலம், பலனை சேர்க்க வரும் கர்த்தருடைய வருகையில் நாம் சகலவித அருமையான கனிகளாக மாற்றப்பட முடியும் (உன்னதப்பாட்டு 7:13). இந்த விதமாக, கர்த்தருடைய வருகையில் நம்மை சேர்க்கும் படிக்கு கர்த்தருடைய நீடிய பொறுமை நமக்கு இரட்சிப்பாக மாறுகிறது (2 பேதுரு 3:14).

தேவன் இவ்வளவு நீடிய பொறுமையுள்ளவராக இருந்தாலும், தன்னுடைய தெரிந்தெடுக்கப்பட்டவர்களுக்காக சீக்கிரத்தில்  நியாயம் செய்து விடுவிக்கிறார் என்று நாம் வாசிக்கிறோம் (லூக்கா 18:7). வெளிப்படுத்தல் 2:16, 3:11, 22:7, 12, 20 இந்த வசனங்களிளெல்லாம் கர்த்தருடைய வருகை சீக்கிரமானது என்று கர்த்தர் கூறுகிறார். ஆனால் கர்த்தர் இன்னும் வரவில்லை என்பதை நாம் அறிவோம். ஆகையால், கர்த்தருடைய வருகை சீக்கிரத்தில் என்று கூறும்போது, ​​தீவிரமாக என்ற அர்த்தத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு நினையாத வேளையில்  சீக்கிரத்தில் வந்து நம்மை தூங்குகிறவர்களாக கண்டுபிடியாதபடிக்கு விழித்திருக்கும் படி நம்மிடமும் எல்லாவரிடமும் கூறுகிறார் (மாற்கு 13:36). ஏனென்றால், நாம் தேடுகிற ஆண்டவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார். இதோ, அவர் வருகிறார் என்று தேவன் கூறுகிறார் (மல்கியா 3:1). மரணம் திடீரென்று நம்மை பிடிக்கும் (சங்கீதம் 55:15). தீவிரமாக ஒரு இமைப்பொழுதிலே நாம் மறுரூபமாக்கப்படுவோம் (1 கொரிந்தியர் 15:52). கர்த்தருடைய வருகையின் போது எடுத்துக்கொள்ளப்பட தகுதியானவர்கள், ஜெயித்து ஆண் பிள்ளையாய் மாற்றப்பட்டவர்கள் தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்திற்கும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவார்கள் (வெளிப்படுத்துதல் 12:5 மலையாளம் வேதாகம்). மனுஷகுமாரனுடைய நாள் நினையாத நேரத்தில் ஒரு கண்ணியைப்போல நம்மேல் வராதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (லூக்கா 21:34). ஆகையால், நாம் சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஆயத்தமுள்ளவராக நிற்போம் (2தீமோத்தேயு 4:2). இயேசு சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ எப்பொழுது வருவார் என்று அறியாததினால் எப்பொழுதும் விழித்திருப்போமாக (மாற்கு 13:35-36) அப்படியாக நம்முடைய தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்படுவோம் (ஆமோஸ் 4:12). ஆயத்தமான ஒரு ஜனத்தை கர்த்தருகாக ஆயத்தப்படுத்துகிற தேவன் (லூக்கா 1:17) நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்து ஆயத்தப்படுத்தி நம் தேவனை சந்திக்கக் காத்து நிற்போம்.