தேவ வசனத்தின் நடைமுறை (எபிரேயர் 4:2)
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
தேவ வசனத்தின் நடைமுறை
சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல நமக்கும் அறிவிக்கப்பட்டது கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால் அவர்கள் கேட்டவசனம் அவர்களுக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை. எபிரேயர் 4:2
நித்திய இராஜ்ஜியமகிய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் முன்பே கிடைத்திருந்தும் அந்த வாக்குத்தத்தை அவர்கள் விசுவாசியாமல் போயினர். ஆகையால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனமில்லாமல் போனதினால் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாமல் போயின. ஆனால் அந்த சுவிசேஷம் நமக்கு அறிவிக்கப்பட்டபோது அவைகள் எல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்கு சம்பவித்தவைக்கல உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படிக்கு எழுதப்பட்டிருக்கிறது (1கொரிந்தியர் 10:11). அவர்களுக்கு சம்பவித்தது போல நமக்கு சம்பவிக்காதிருக்கும்படி திருஷ்டாந்தங்களாக நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது (1கொரிந்தியர்10:6).
ஆகையால் நாம் கேட்கும் சுவிசேஷங்களும் தேவனுடியா வாக்குத்தத்தமாகிய தேவ வசனங்கலும் நம்முடைய வாழ்க்கையில் பிரயோஜனமாக இருக்க வேண்டும். ரோமர்10:17 ல் ஆதலால் விசுவாசம் கேள்வியினாலும் கேள்வி தேவனுடைய வசனத்தினால் வரும் என்று வாசிக்கிறோம். அதாவது நாம் கேட்டால் மட்டுமே நம்மில் விசுவாசம் உண்டாகும், கேள்விப்படாதவர்கள் விசுவாசிக்க முடியாது (ரோமர்10:14). காதுள்ளவர்களுக்கு கேட்க முடியாதா? கெழக்கவேண்டுமானால் முதலாவது கர்த்தருடைய வசனத்தை கேட்க வேண்டுமென்ற பசியும் தாகமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் (ஆமோஸ் 8:11). கர்த்தருடைய வசனம் கேட்க வேண்டுமென்ற ஒரு ஆவலும் இருந்தால் மட்டுமே திருப்தியடைய முடியும். இரண்டாவதாக தேவனுடைய வசனத்தை கேட்கும்படிக்கு அதிகாலையில் தேவனுடைய ஆலயத்திலே தேவசமூகத்தில் கூடிவரவேண்டும் (லூக்கா 21:38). தேவனுடைய வசனம் பிரசிங்கிக்கப்படுகிற இடத்தில் சென்று கேட்க உற்சாகம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வீட்டிலோ மற்ற இடங்களிலோ இருந்தால் கேட்க முடியாது. இனியும் கேட்கிறதிற்குக் காதுள்ளவன் கேட்கக்டவன் என்று இயேசு பலமுறை சொன்னது போல கேட்கக்கூடிய காதுள்ளவர்களாக இருக்க வேண்டும் (மத்தேயு11:15). நாம் துல்லியமாக கல்விமானைப் போல கேட்டு கற்றுக்கொள்ளும்படி காலைதோறும் எழுப்பி செவியை கவனிக்கச் செய்யவேண்டும் (ஏசாயா 50:4-5). அப்படியானால் கர்த்தருடைய கட்டளைகளை கவனமாயும் (உபாகமம் 28:1) மனம்பொருந்தி செவிக்கொடுத்தும் கெழக்கமுடியும் (ஏசாயா 1:19).
ரோமர் 10:17 ல் விசுவாசம் கேள்வினாலும் கேள்வி தேவனுடைய வசனத்தினாலும் என்று வாசிப்பதால் நாம் கேட்பது தேவனுடைய வசனமாகவே இருக்க வேண்டும். இந்தநாட்களில் அநேகர் மனுஷனுடைய கற்பனைகளை உபதேசங்களாக போதித்து தேவனுக்கு வீணான ஆராதனை செய்கிறார்கள் (மத்தேயு 15:9, மாற்கு 7:7). ஆகையால் அவர்கள் போதிக்கும் வசனங்கலும் உபதேசங்களும் கேட்கிறவர்களுக்குள் விசுவாசத்தை கொண்டு வருவதில்லை. தான் கட்டளையிட்ட உபதேசத்தை கற்பிக்கும்படியாகத்தான் இயேசு தன் சீஷர்களிடம் கூறினார் (மத்தேயு 28:20). அதனால் தான் அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய அனுபவத்தை சொல்லும்போது தனக்கு விசேஷித்த தைரியம் உண்டாயிருந்தது. நான் மனிதர்களிடத்தில் பெற்றதுமில்லை மனிதர்களிடத்தில் கற்றதுமில்லை இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் கர்த்தரிடத்திலேயே அதைப் பெற்றுக் கொண்டேன் என்று தைரியமாக சொல்லுகிறார் (கலாத்தியர் 1:12). கர்த்தராகிய இயேசுவின் இராபோஜனத்தில் பவுல் பங்கு பெறவில்லை என்றாலும் கர்த்தருடைய பந்தியின் அனுபவத்தை பவுல் கர்த்தரிடத்திலிருந்து பெற்றுக் கொண்டு அதை நமக்கு ஒப்புவித்தார் (1கொரிந்தியர் 11:23). அந்த காலத்தில் சகலஜனத்தினாலும் கனம் பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்ற பரிசேயன் எருசலேம்மில் இருந்தார் (அப்போஸ்தலர் 5:34). பவுல் கமாலியேலின் பாத்தத்தினருக்கே வளர்ந்து நியாயப்பிரமாணம் படித்தவராய் இருந்தார் (அப்போஸ்தலர் 22:3). தான் இயேசுவினால் சந்திக்கப்பட்டு கர்த்தருடைய சீஷனாக மாறினபோது நியாயசாஸ்திரிகள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை என்று சொல்லுகிறார் (கலாத்தியர் 2:6,7). நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை கற்றதுமில்லை இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார் என்று பெருமிதம் கொள்கிறார் (கலாத்தியர் 1:12).
அதுபோல கர்த்தருடைய கையில் இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாரும் கர்த்தருடைய பாதத்தில் இருந்து கர்த்தருடைய வார்த்தையினால் போதனையடைகிறவர்களாக இருக்க வேண்டும் (உபாகமம் 33:3). கர்த்தருடைய ஆலோசனயில் கூடநின்று அவருடைய வார்த்தையை கவனித்து கேட்டறிந்து அதை ஜனங்களுக்கு தெரிவிக்க உற்சாகமுள்ளவர்களாக காணப்பட வேண்டும் (எரேமியா 23:18-22). அப்படி செய்யும்போது கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு அவரவர்களுடைய நிலவரத்துக்கு ஏற்றபடி அருளிச்செய்வார். மழையானது இளம் பயிரின் மேல் பொலிவது போலவும் பனித்துளிகள் புல்லின் மேல் இறங்குகிறது போலவும் கர்த்தருடைய உபதேசங்களும் வசனங்களும் அவர்கள் மூலமாக கொடுப்பார் (உபாகமம் 32:1,2). தேவனால், தேவ ஆவியினால் அவர்கள் தேவனுடைய வசனங்கலாக்கிய பெரியகாரியங்களை பேசும்போது கேட்கிறவர்களுக்கு தங்களுடைய பாஷையில் தங்களோடு பேசுவது போல காணப்பட்டு அவர்களுக்கு இந்த கிறிஸ்துவின் வசனங்கள் விசுவாசமாக மாறும் (அப்போஸ்தலர் 2:6-11). வேறொரு நிலவரத்தில் ஆடுகளுடைய நிலைமையை நன்றாக அறிந்து மந்தைகளின் மேல் கவனமாயிருக்கிற மேய்ப்பர்களாக (நீதிமொழிகள் 27:23) ஜனங்களுக்கு ஏற்ற வசனங்களை உபதேசங்களை தேவனிடத்திலிருந்து பெற்று கொடுக்கும்போது அவைகள் அவர்களுடைய வாழ்க்கைக்கு பிரயோஜனமுள்ளதாகவும் விசுவாசிக்கக்கூடியதாகவும் இருக்கும். தன்னுடைய உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் தன்னுடைய வீட்டில் வரவழைத்து கூடிவரச்செய்து கொர்நேலியு பேதுருவினிடத்தில் “தேவனாலே கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படி நாங்கள் எல்லாரும் தேவ சமூகத்தில் கூடியிருக்கிறோம்” என்று சொன்னது போலுள்ள மனோபாவம் உள்ளவர்களாக நாம் கூடி வர வேண்டும் (அப்போஸ்தலர் 10:24-33). உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால் என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன் என்பது போல தேவ சமூகத்தில் கர்த்தாவே எங்களுடைய ஜீவிய நிலவரத்துக்கு ஏற்றபடி எங்களோடு பேசும் என்று ஜெபிக்கிறவர்களாயிருக்க வேண்டும் (சங்கீதம் 119:131). அப்படி செய்யும்போது கர்த்தருடைய ஆவியானவர் தேவசமூகத்திலிருந்து வசனங்களை ஆராய்ந்து அறிகிற ஊழியர்களை நமக்கு தருவார் (ஏசாயா 40:1). உங்களுக்கு என் இருதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள் என்ற (எரேமியா 3:15) தேவனுடைய வார்த்தையை போல சபையை நடத்தும்படி தேவசத்தத்தை கேட்கப்பண்ணுகிறபடியால் அது ஜனத்துக்கு விசுவாசமாகவும் மிகவும் பிரயோஜனமாகவும் மாறும்.
இனியும் யாக்கோபு 2:14 ல் ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் பிரயோஜனம் என்னவென்று கேட்கிறார். ஆகையால் கிரியைகளில்லாத விசுவாசம் தன்னில்தானே செத்ததாயிருக்கும் அதினால் ஒரு பலனுமில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும் (யாக்கோபு 2:17-20). ஆகையால் நம்முடைய விசுவாசம் நமக்கு பிரயோஜன படவேண்டுமெண்டல் நம்முடைய விசுவாசம் கிரியைகளோடு கூட முயற்சி செய்து கிறேயேய்கலினாலே விசுவாசம் பூரணமாக்கப்பட வேண்டும் (யாக்கோபு 2:21-23). ஆபிரகாமை குறித்து தன்னுடைய குமாரனை பலிபீடத்தில் செலுத்தினபோது கிரியைகளினால் அவன் நீதிமானாக்கப்பட்டான் அவனுடைய விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்ற வேதவாக்கியம் நிறைவேறிற்று என்ற்று பார்க்கிறோம். அப்படி நம்முடைய விசுவாசம் நமக்கு பிரயோஜனமாக்கப்பட்டு நம்மிடம் நிறைவேற்றப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சங்கீதம் 133:1 -ல் சகோதரர்கள் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமாக இருக்கிறது அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கிற ஒரு மனிதன் இந்த ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் பெற்றுக்கொலும்பாடியாக அந்த வசனங்கள் அவனுக்கு பிரயோஜனமாக்கப்பட வேண்டுமென்றால் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது போல தன்னுடைய குடும்பத்தில் ஐக்கியமுள்ளவனாய் ஒருமனதோடும் சந்தோஷத்தோடும் ஒருமித்து வாழ்கிறவர்களாக காணப்பட வேண்டும். பாலை மரத்தில் காய்கள் பிரிந்திருக்கிறது போல பிரிந்து ஜீவித்தால் வசனம் பிரயோஜனப்பட முடியாது. ஏசாவையும் யாக்கோபையும் போல இருதயத்தில் பகையும் தந்திரங்களும் வைத்துக்கொண்டு ஒரு தாயின் பிள்ளைகளாக ஒரே வீட்டில் ஒருமித்து வாழ்ந்தாலும் இருதயங்களை ஆராய்கிற கர்த்தர் அவர்கலே பிரிப்பதேயல்லாமல் ஆசீர்வதிக்க முடியாது. சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையை காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாக இருப்போம். அப்போது தேவனுடைய ஆசிர்வாதம் கிடைக்கும் (எபேசியர் 4:3).
பவுல் அப்போஸ்தலன் கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தால் நீதிகரிக்கப்படுகிற காரியம் சொல்லும்போது ரோமர்4:3-16 வசனங்களில் கவனித்து பார்த்தால், விசுவாசத்தால் வருகிற நீதி கிருபையாக கணக்கிடப்பட்டு சுதந்திரம் கிருபையினால் ஒருவன் இரட்சிக்கப்படுகிற அனுபவத்தை ஞாபகப்படுத்துகிறது. தேவனுடைய ஈவாகிய இரட்சிப்பு விருத்தசேதனத்தினாலோ, நியாயப்பிரமாணத்தின் கிளைகளினாலோ அல்லாமல் கிருபையினால் இயேசு கிறிஸ்துவிலுள்ள விசுவாசம் மூலமாக நமக்கு கிடைக்கிறது (எபேசியர் 2:8,9). ஆனால் மாற்கு16:16 ல் விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று சொல்லுகிற இயேசு விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான் என்றும் ஞாபகப்படுத்துகிறார். விசுவாசியாதவன் விசுவாசத்தின் கிரியையாகிய ஞானஸ்நானம் பெட்டுக்கொல்லாத்தத்தினால் கிருபையால் உள்ள இரட்சிப்பாகிய ஈவு என்ற வாக்குத்தத்தம் தனக்கு பிரயோஜனப்படாமல் ஆக்கினைக்குள்ளாக்கப்படுகிறான். ரோமர் 6:17,18 வசனங்களில் அப்போஸ்தலன் நம்மோடு சொல்வது என்னவென்றால், முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஞானஸ்நான உபதேசத்தை நீங்கள் மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்தபடியினால் நீதிக்கு அடிமைகளாக நீதிகரிக்கப்பட்டவர்கள் ஆகினர் என்று ஞாபகப்படுத்துகிறார். ரோமர் 4:17-ல் ஆபிரகாம் விசுவாசத்தால் தேவனை பற்றி இரண்டு அனுபவங்களை சொல்லுகிறார் ஒன்று மரித்தோரை உயிர்பிக்கிறவர் என்றும் இரண்டு இல்லாதவைகளை இருக்கிறதை போல அழைக்கிறவர் என்றும் ஆகும்.இதில் இரண்டாவது காரியத்தை குறித்து பவுல் அப்போஸ்தலன் சொல்லும்போது ஆபிரகாம் நம்புவதற்கு ஏதுவல்லாதிருந்தும் அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான் வாக்கு பண்ணின தேவன் நிறைவேற்ற வல்லவர் என்று முழு நிச்சயமாய் நம்பி தேவனை மகிமைப்படுத்தி விசுவாசித்தான். ஆகவே மற்றொன்றும் செய்ய வேண்டியதாக இருக்கவில்லை. (ரோமர் 4:18:22). இங்கு ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டார் என்பதை நீதியின் முதல் பகுதியாக காணலாம். தான் விசுவாசித்த மற்றொரு அனுபவம் மரித்தோரை உயிர்பிக்கிறதாக்க இருக்கிறது (ரோமர் 4:17). இது விசுவாசத்தின் இரண்டாவது பகுதியாக யாக்கோபு 2:21-24 ல் பார்க்கிறோம். மரித்தோரை உயிர்பிக்கிறார் என்று விசுவாசிக்கிறதினால் ஈசாக்கை பலிசெலுத்தும் கிரியை செய்தால் மட்டுமே தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும். அதுபோல் விசுவாசம் கிரியைகலொடுக்குடை முயிற்சி செய்து கிரியைகளினால் விசுவாசம் பூரணமாக்கப்பட்டபோது விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்ற வேத வாக்கியம் நிறைவேற எதுவாகும். ஈசாக்கின் பிறப்பில் விசுவாசித்து தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தின் முதலாவது பகுதியை வெளிப்படுத்திய ஆபிரகாம் ஈசாக்கை பலி செலுத்தி விசுவாசத்தின் பூரணத்தில் வந்த போது தான் நீதிகரிக்கப்பட்டான் என்கிற வேதவாக்கியம் நிறைவேறுகிறது. ஆகையால் நம்முடைய வாழ்க்கையில் கேட்கிற கிறிஸ்துவினுடைய வசனங்கள் நம்மில் விசுவாசமாக மாறி நாம் அதற்கேற்ற கிரியைகளை செய்தால் அந்த விசுவாசம் நம்மில் பூரணப்படும். அப்போது தேவனுடைய வசனங்களை நமக்காக நிறைவேற்றி அதில் உள்ள ஆசீர்வாதங்களை பெறவும் அந்த தேவனுடைய வசனங்கள் நமக்கு பிரயோஜனமாகவும் மாறும் (ஏசாயா 55:10,11).
நம்முடைய பிதாவாகிய ஆண்டவர் இந்த அனுபவங்களுக்கு நம்மை தகுதியுள்ளவர்கலாக்கி தம்முடைய ஆசீர்வாதத்தின் பூரணத்தால் நிறைத்து தம் நாமத்தை மகிமைப்படுத்துவராக.