அருமையான கனிகளாக்கப்பட்டவர்கள் (யாக்கோபு 5:7-8)

அருமையான கனிகளாக்கப்பட்டவர்கள் (யாக்கோபு 5:7-8)
: :

தேவனுக்கு மகிமை

அருமையான கனிகளாக்கப்பட்டவர்கள்

"
இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடைய வேண்டுமென்று முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடியபொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடியபொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே."  யாக்கோபு 5:7-8

பயிரிடுகிறவன் நீடிய பொறுமையோடு காத்திருப்பது பூமியிலிருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என்பதினால் அல்ல மாறாக நற்பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. 1 கொரிந்தியர் 3:6-9 ல் நாம் தேவனுடைய பண்ணை யாகவும் ஊழியக்காரர்கள் நடுகிறவர்களும் நீர் பாய்ச்சிறவர்களும் என்றும் வாசிக்கிறோம். நம்முடைய பிதாவாகிய தேவன் தோட்டக்காரரும் இயேசு திராட்சை செடியானவரும் நாம் ஒவ்வொருவரும் திராட்சைச் செடியில் இருக்கும் கொடிகள் என்றும் இயேசுவும் கூறுகிறார். கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அவைகளை அறுத்து போடுவதாகவும், வெளியே எறியுண்டு உலர்ந்த போவதினால் அப்படிப்பட்டவர்களை சேர்த்து அக்கினியிலே போடப்பட்டு எரிந்து போகும் எனவும் இயேசு சொல்லுகிறார் (யோவான் 15:1-6). மகிமையுள்ள சிங்காசனத்தின் முன்பாக கொண்டுவரப்பட்டவரில் இடது பக்கத்தில் உள்ள வெள்ளாடுகளை போன்றவர்கள் இயேசுயுடைய ஆடுகலாய் இருந்தாலும் இயேசு விரும்புகிறப்படியுள்ள அனுபவமில்லாதவர் அதாவது கனியற்றவர்களாக அவர்கள் காணப்பட்டத்தினால் நரகமாகிய நித்திய ஆக்கினியில் அனுப்பப்பட்டார்கள் (மத்தேயு 25:41).

ஆதலால் தேவ சமூகத்தில் கொண்டுவரப்பட்ட தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவரும் நிச்சயமாகவே கனியுள்ளவர்களாக காணப்பட வேண்டும். இயேசு  நம்மை அவரில் தெரிந்து கொண்டு அதாவது தன்னுடைய சரீரமாகிய சபையில் நம்மை சேர்த்து வைத்தது நாம் கனி கொடுக்கிறவர்களாகவும் நம்முடைய கனிகள் நிலைத்திருக்கும் படிக்கே (யோவான் 15:16). இனியும் மகா செழிப்பான மேட்டிலே நம்முடைய நேசர் ஆகிய இயேசுவினுடைய திராட்சைத் தோட்டம் ஆகிய சபையில் நாம் இருக்கும்போது கசப்பான பழங்களை கொடுக்கிறவர்களாக இருந்தால் தேவன் நம்மை அழித்துப் போடுவார் (ஏசாயா 5:1-6). ஆனபடியால் தேவன் நம்மை பற்றி தான் விரும்புகிறதான கனி உள்ளவர்களாக இருக்க வேண்டும்  என்று கூறும்போது  நல்ல கனியுள்ளாவறாக இருக்க வேண்டும், அதாவது நற்பலன உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் நாம் தேவனுக்கு உடையவர்களாக இருக்கும்படி தேவன் நம்மை அழைத்து மீட்டுக் கொண்டது நம்மை தன்னுடைய சமூகத்தில் விலையேறப்  பெற்றவர்களாக கண்டதினாலே ஆகும் (ஏசாயா 43:1-4). ஆதலால் கர்த்தர் நம்மில் நின்று எதிர்பார்க்கும் கனிகளும் விலையேறப் பெற்றது. இதைப் பற்றி நாம் விரிவாக படிக்கும்போது கிறிஸ்துவின் மனைவிக்கு நிழலான சூலமித்தி கூறுவது நான் என் நேசருக்காக சேர்த்து வைத்திருக்கிற புதியவைகளும் பழையவைகளுமான சகலவித கனிகளும் ஆகும். அதுமட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் அருமையான கனிகள் ஆகும்(உன்னதப்பாட்டு 7 :13). ஆகவே நாம் அருமையான கனிகள் உள்ளவர்களாக மாற்றப்பட, விலையேறிய கனிகளாய் மாற்றப்பட முன்மாரியும் பின்மாரியும் தேவையாக இருக்கிறது (யாக்கோபு 5:7). கர்த்தருடைய வசனமும் தெய்வீகமான  உபதேசங்களும் ஆன மழையினால் நாம் வளர்ச்சி அடைகிறோம் (உபாகமம் 32:2). தேவனுடைய உடன் வேலைகாராகிய  ஊழியக்காரர்களால் நாம் நீர்ப்பாய்ச்சப் படுகிறவர்களாகும்படி (1கொரிந்தியர் 3:6-9). நமக்கு கிடைக்கிற உபதேசங்களும் புத்தி சொல்லுதல்களாலும் நம்மை இயேசு கிறிஸ்துவுக்குள் தேறினவர்கள் ஆக்குகிறது (கொலோசெயர் 1:28). நாம் அருமையான விலையேறிய கனிகள் ஆகிறோம்.

சகலவித அருமையான கனிகள் என்று நாம் உன்னதப்பாட்டில் வாசிக்கும்போது நம் ஜீவயத்தில் நாம் விலையேறப் பெற்ற கனிகளாக மாற்றப்படும் படிக்கு பழையவையும், புதியவைகளுமான நாம் பெற்று கொள்ள வேண்டிய எல்லா கனிகளையும் பெற்று கொள்ளவர்களாக வேண்டும். மற்றொரு விதத்தில் நாம் நூறத்தனையான பலன் கொடுக்கிறவர்களாக வேண்டும் (லூக்கா 8:8). மத்தேயு மற்றும் மாற்கு சுவிசேஷத்தில் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட வசனமாகிய விதை முப்பது, அறுவது, நூறும்மாக பலன் தந்தது என்று நாம் வாசிக்கிறோம் (மத்தேயு 13:8,23; மாற்கு 4:8,20) விளைவில் இந்த மூன்று நிலைகள் மானுஷிகமாக நம்மை நூறுத்தனையான பலன் என்ற அனுபவத்தில் நடத்தப்படும்படி  நம்மை உற்சாகப்படுத்த கூடியாதாயிருக்கிறது. ஆனால் நாம் ஆவிக்குரிய பிரகாரமாக சிந்தித்துப் பார்ப்போமானால் மத்தேயு மற்றும் மாற்கு சுவிசேஷங்களை கடந்து லூக்கா சுவிசேஷத்தில் வரும்போது, அதாவது வசனங்களின் ஆழங்களில் நாம் நடத்தப்படும்போது நம்முடைய ஜீவியத்தில் முப்பதும் அறுவதும் மாற்றப்பட்டு நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டது முலைத்து நூறாக பலன் கொடுத்து என்று வாசிக்கிறோம் (லூக்கா 8:8). நாம் பெற்றுக்கொள்ளும் தெய்வீக ஞானத்திற்கும் அனுபவங்களுக்கும் ஏற்றப்படி தெய்வீகமான வளர்ச்சியடையும்போது (எபேசியர் 4:15) தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களா யிருப்போம். நூறு பலன் என்ற விளைவின் பூர்ணத்தை அடைய முடியும். இந்த அனுபவத்திற்கு நாம் வருவதற்கு நமக்கு வேண்டிய ஜீவிய அனுபவத்தை கவனிக்கும்போது (லூக்கா 8:15) வசனத்தைக் கேட்டு அதை உண்மையும் நன்மையுமான இருதயத்தில் காத்து பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களா யிருக்க வேண்டும் என்பதே (யாக்கோபு 5:7-8). நற்பலனை அடையவேண்டுமென்று காத்திருக்கிற பயரிடுகிறவன் நீடிய பொறுமையாயிருக்க வேண்டும் என சொல்லும்போது நம் இருதயங்களை ஸ்திரப் படுத்த வேண்டும் எனவும் சொல்லுகிறது. சுருக்க மென்னவெனில் நற்பலன் உள்ளவராகும்படி சகலவித அருமையான கனிகளும் நிலைத்தவர்களாக, நூறு பலன் விளைவுள்ளவர்களாகும்படி இயேசுவும் கூறுவது பொறுமையோடிருந்து உண்மையும், நன்மையும் உள்ள இருதயமுள்ளவர்களாக வேண்டும் என்பதே. நம்முடைய இருதயத்தைப் பற்றியுள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

நாம் இரட்ச்சிக்கப்பட்ட நம்முடைய ஜீவிய ஆரம்பத்தைக் கவனிக்கும் போது நாம் கர்த்தருடைய கட்டளைகளில் நடக்கவும், நியாயங்கள் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யும்படியாகவும் கர்த்தர் சில காரியங்களை செய்து தருகிறார். கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு மாமிசமான இருதயத்தை நமக்கு தந்து நம் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுகிறார் (எசேக்கியேல் 36:26-27). இது பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்களின் அனுபவமல்ல, புதிய ஏற்பாட்டு சபையாகிய நம்முடைய அனுபவமாயிருக்கிறது. சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை என்றென்றைக்கும் நம்மோடுகூட இருக்கும்படி தேவன் நமக்கு தருகிறார் (யோவான் 14:16). நாம் தேவனுடைய ஆலயமாகும்படி தேவனுடைய ஆவி நம்மில், நம்முடைய சரீரத்தில் வாசமாயிருப்பது பழைய ஏற்பாட்டின் காலத்திலல்ல, இந்த காலத்தில் தான் நடைமுறையிலுள்ளது (1 கொரிந்திந்தியர் 3:16; 6:19). சத்திய ஆவியாகிய அவர் போதித்தும், சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை வழி நடத்துகிறப்படியால் அன்று தீர்க்கதரிசனமுறைக்கப்பட்டது போல நாம் தேவனுடைய கட்டளைகளில் நடக்கவும் நியாங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்கிறாவர்களுமாகிறோம் (யோவான் 14:26; 11:13). உண்மையாகவே நாம் நூறாகப் பலன் கொடுக்கும்ப்படிக்கு உண்மையுள்ள நல்ல இருதயமுள்ளவர்களாக மாற்ற தேவன் தாமே நமக்கு உதவி செய்கிறார். ஆனால் நம்முடைய இருதயம் சாய்ந்துபோகாமலிருக்கும்படி நாம் அதை ஸ்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது (யாக்கோபு 5:7-8). இல்லை என்றால் சாலமோனின் வாழ்க்கையில் சம்பவித்தது போல நமக்கும் சம்பவிக்கும். கர்த்தர் சாலமோனுக்கு ஞானமும், உணர்வுமுள்ள இருதயத்தையும் கடற்கரை மணத்தனையான மனோவிருத்தியும் கொடுத்திருந்தார் (1 இராஜாக்கள் 3:12; 4:29). ஆனால் சாலமோனின் வாழ்வில் தன் இருதயம் நயமாய் வசிகரிக்கப்பட்டு தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக இருதயத்தில் உத்தமம் நஷ்டப்பட்டுப்போனது (1 இராஜாக்கள் 11:4). இதன் காரணமாக கர்த்தரை விட்டு தன் இருதயத்தை திருப்பி அவர் கற்பித்தவயயை கைக்கொள்ளாமலும் இருந்தான் (1 இராஜாக்கள் 11:9-10). நாம் இருதயத்தை ஸ்திரப்படுத்தாவிட்டால் கர்த்தருடைய கட்டளைகளின்படி நடக்காமலும், நியாயங்களை கைக்கொள்ளாமலும் அதின்படி செய்யாதவர்களாக தேவனை விட்டு பின்மாறுகிறவர்களாக மாறிவிடுவோம்.

மனிதர்களின் இருதயத்தின் நிலைவரத்தை தேவனே பார்த்து கூறுவது மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது என்றும் (ஆதியாகமம் 8:21) இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் கர்த்தர் கான்கிறார் (ஆதியாகமம் 6:5). அந்த பொல்லாத நிலைவரத்தை மாற்றும்படியாகவே தேவன் கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, மாமிசமான இருதயத்தை நம்முடைய ஆவிக்குரிய ஜீவிய ஆரம்பத்தில் மனந்திரும்புதல் ஞானஸ்தானத்திலே நமக்கு தருகிறார். அபிஷேகத்தினால் ஆவியை நம் உள்ளில் ஆக்கவும் செய்கிறார். ஆனால் தேவனை அறிந்திருக்கிற ஒரு நபர் தேவனைப்பற்றி நிச்சயமாகவே தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலும் இருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணராக மாற்றப்படும் போது அவர்களுடைய உணர்வில்லாத இருதயம் இருண்டுபோகிறது (ரோமர் 1:21). இக்காலத்தில் அநேகர் தேவ சமூகத்தில் நன்றி இல்லாதவர்களாகவே ஜீவிக்கின்றனர். அவர் செய்த நன்மைகள் ஒன்றையும் மறவாமல் முழு உள்ளத்தோடும் நல்ல ஆத்துமாவோடும் தேவனை ஸ்தோத்திரிக்கு வேண்டியவர்கள் தான் நாம் அனைவரும் (சங்கீதம் 103:1-2). அதுமட்டுமல்ல, நாம் தேவனை மகிமைப்படுத்துகிறவர்களாய் இருக்கவேண்டும். நம் வாழ்வின் அன்றாட நிகழ்வாகிய பூசிப்பிலும் குடிப்பிலும் கூட தேவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டும் (1 கொரிந்தியர் 10:31). ஆனால் இன்று அநேகர் தற்பெருமைக்காக பல காரியங்களையும் சொந்தமாக வெளிப்படுத்திக் கொண்டு சுய மகிமையை தேடுகிரவர்களாயிருப்பதினால் உண்மையில்லாதவர்களும் அநீதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் ஜீவியத்தில் அவர்களுடைய இருதயம் இருளடைந்து போவது மட்டுமல்ல, புத்தியில் அந்தகாரப்பட்டு இருதயம் கடினப்பட்டு போகவும் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து, உணர்வில்லாதவர்களாய் சகலவித அசுத்தங்களையும், ஆவியோடே நடப்பிகிறவர்களுமாய் மாற்றப்படுகிறார்கள் (எபேசியர் 4:18-19). சுருக்கமாக கல்லான இருதயமாகிய பழைய நிலைவரத்திற்கு மாற்றப்பட்டுப் பின்மாற்றக்காராகின்றனர்.

ஆகையால் நம்மை நாமே நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்கவேண்டும். பொல்லாதவர்களாயிருக்க நலமானவைகளை பேசமுடியாதப்படியால் நம்மை நாமே அறிந்து கொள்ள முடியும். காரணம் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 12: 37). கிரியைகளினாலும் நம் இருதயத்தை அறிந்து கொள்ள முடியும். இருதயம் பொல்லாதனவையாக இருந்தால் கிரியைகளும் பொல்லாங்கானவைகளாகவே வெளிப்படும் (மாற்கு 7:20-23). மற்றொரு விதத்தில் நம்முடைய இருதயம் குணங்கள் நிறைந்த நல்ல இருதயமாயிருந்தால் நாம் நல்லவைகளை மட்டுமே பேசுகிறவர்களும், நல்ல கிரியைகள் மட்டுமே செய்கிறவர்களாயிருப்போம். இருதயம் எல்லாவற்றைப் பார்க்கிலும் திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாக இருக்கிறது (எரேமியா 17:9-10). அதை ஆராய்ந்து அறிந்து கொள்ள உற்சாகமுள்ளவர்களாயிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நம்மை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்து ஜெபித்தால் தேவானாகிய கர்த்தர் நம்முடைய இருதயத்தை சோதனை செய்து அறிவார். வேதனை உண்டாக்கும் வழி உண்டோ என்று பார்த்து நித்திய வழியில் நாம் நடக்க உதவி செய்வார் (சங்கீதம் 139:23-24). நம்மை சிறுமைப்படுத்தி, சோதித்து பார்க்கும்போது நம் இருதயத்தில் உள்ளவைகளை நாம் அறியுமுடியும் (உபாகமம் 8:2).தொடர்ந்து நாம் நம்மை சிறுமைப்படுத்தி ஜெபித்தால், இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நம் இருதயங்களை சுத்திகரித்து சாட்சியாக தம்முடைய ஆவியை நமக்குத் தருவார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8-9). தேவனுடைய ஆவி நம் உள்ளத்தில் வருவதினால் நாம் குணமேறிய நலமான இருதயமுள்ளவர்களாக கர்த்தருடைய கட்டளைகளின் படி நடக்கிறவர்களும், நியாயங்களைக் கைக்கொண்டு அதின்படி செய்கிறவர்களுமாயிருப்போம் (எசேக்கியல் 36:26-27). வசனத்தை இருதயத்தில் காத்து, பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாக நூறுத்தனையான விளைச்சல் உள்ளவர்களாக முடியும் (லூக்கா 8:15). அப்படியே சகலவித அருமையான கனிகளும் உள்ளவர்களாக நாம் மாற்றப்பட்டு விலையேறப் பெற்ற கனியாக தேவ சமூகத்தில் நாம் காணப்படவும் முடியும். தேவனாகிய கர்த்தர் நம்மை அதற்காக உதவி செய்து ஆயத்தப்படுத்துவாராக.